தமிழப் பால்-லா இந்திப் பால்-லா

தமிழ்ப் 'பால்'லா இந்திப் 'பால்'லா?
@@@@@
அப்பா எனக்கு எதுக்குப்பா பால்'ன்னு பேரு வச்சீங்க?
@#####
ஏண்டாச் செல்லம் பால், என்னடா ஆச்சு?
@@@@@@
என்னோட வகுப்பிலே இருக்கற பசங்கெல்லாம் என்னப் பாக்கற போதெல்லாம் "இதோடா பால் வருது. பால்க்காரரே லிட்டர் என்ன வெலையுங்கோ"ன்னு சொல்லி என்னக் கிண்டல் பண்ணறாங்க அப்பா.
##@###
சரிடா கண்ணு. அதப் பத்தி நீ இனிமே கவலப்படாத. அவுங்ககிட்டச் சொல்லு " எங்க எனக்கு வச்சிருக்கற பேரு தமிழ்ப் 'பால்' இல்ல. எம் பேரு இந்திப் 'பால்'. நீங்கெல்லாம் அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்கள வச்சிருக்கீங்க. இந்திலே 'பால்'ன்னா "பணிவான, சிறிய, சான்று கையொப்பமிடுபவர்"ன்னு பல அர்த்தங்கள் இருக்குது"ன்னு சொல்லு. இனிமே அந்தப் பசங்களுக்கு உம்மேல தனிமரியாதையே வந்திடும்.
@####
சரிங்க அப்பா. நீங்க சொன்னதை அப்பிடியே சொல்லி அவுனுக வாய அடக்கப்போறேம்ப்பா.

எழுதியவர் : மலர் (11-Jun-16, 12:16 pm)
பார்வை : 122

சிறந்த நகைச்சுவைகள்

மேலே