விசை - அசை - இசை

ஏண்டா மவனே நீ டாக்டரு பட்டம் வாங்கவரைக்கும் நாங்க எவ்வளவு கசட்டப்பட்டம்ணும் உனக்கு தெரியுமா? தெரியாதா?
@@@
என்னம்மா அதையெல்லாம் நா எப்பிடிமா மறக்க முடியும். நீயும் அப்பாவும்தாம்மா எனக்கு கண்கண்ட தெய்வங்கள். நா இன்னைக்கு ஒரு கல்லூரிலே தமிழ்ப் பேராசிரியரா இருக்கறன்னா நீயும் அப்பாவும் செஞ்ச தியாகமும் உழைப்புந்தாம்மா.
##@@
சரிடா மவனே மணிமாறா நீ தமிழ்ப் பேராசியரா இருக்கறதெல்லாம் சரிதான். உம் பசங்களுக்கு போயி விசை, அசைன்னு வாயிலே நொழையாத பேருங்கள வச்சிருக்கறயே இதான் நம்ம தாய் மொழிக்கு செய்யற தொண்டா?
@@@
அம்மா என்ன மாதிரி பேராசிரியர்களா இருக்கற 98% பேரு அவுங்க பிள்ளைங்களுக்கெல்லாம் வாயில நொழையாத அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்களத்தான் வச்சிருக்காங்க. நா மட்டும் எம் பிள்ளைங்களுக்கு தமிழ்ப் பேருங்கள வச்சா என்னக் கேவலமா நெனப்பாங்க. நா அர்த்தம் தெரிஞ்ச பேருங்களாத்தான் வச்சிருக்கேன். விஜய் - ன்னா வெற்றி. அஜய் - தோற்கடிக்க முடியாத -ன்னு அர்த்தம்மா
#@##
அர்த்தமெல்லாம் சரிதான். ஆனா தாய் மொழியைக் கேவலப்படுத்தறது சரியா?

@%@
என்னம்மா செய்யறது இந்த உலகத்தல நிம்மதியா வாழம்ன்னா ஊரோட ஒத்துப்போகவேண்டி இருக்குதே. சரிம்மா உம் புண்ணியத்ல எனக்கு இன்னொரு கொழந்தை பொறந்தா அதுக்கு இசை - ன்னு பேரு வைக்கப்போறம்மா.

எழுதியவர் : மலர் (14-Jun-16, 11:41 pm)
பார்வை : 203

மேலே