கோடை

கோடை
--------------


மீசை துளிர்த்த
ராசாக்களை பொசுக்கிவிடுகிறது
பட்டுப்பாவாடையில் ஏரிகிற தீ !

அதிகாலையிலேயே
கந்தகத் தருக்கள்
பந்தம் ஏந்துகின்றன
செம்பனித்துளிகளில்...

கட்டை அடுக்கிய சவம்
தாகத்தில் தவம் செய்கிறது
மகன் கொடுக்கும் கடைசி
பானைத் தண்ணீருக்காக..!

நீர்ப்பரப்பு கொதிக்கிறது
மீன்கள்விடும் குமிழிகள்..!

தேர்தல் வாக்குறுதிகள்
ஏழை மக்களின் குருதி
குடிக்கின்றன...

வரிப்பணத்தில் எழுதி
வைக்க்கப்படுகின்றது
முதிய உடலின்
தீர்க்க ரேகைகள்...

கை காட்டுபவர்களின்
அறையில் அக்னி கொதிக்குமே
அது கோடையின் குமுறல் அல்ல,
அன்றாடத்தின் பசி..!

எழுதியவர் : திருமூர்த்தி (18-Jun-16, 12:51 am)
Tanglish : kodai
பார்வை : 182

மேலே