கவிதையின் வலி

ஆடையெனும் உடமைகளைச்
சுமந்து நிற்கின்ற கழுதையைப்போல்
அவளின் உவமைகளைச்
சுமந்து நிற்கின்றது என் கவிதை

உடமைகள் குறைந்தால்
கழுதையோ மகிழ்ச்சியாய் வாழும்
உவமைகள் குறைந்தால்
கவிதைகள் மலர்சியின்றி வீழும்

நான் குருதி கொண்டு
எழுதிய கவித்தாளை
குருவியாக பறக்கவிட்டாள்
அந்த முத்தாள்

வறுமையை வயிற்றிலும்
வளமையை நெஞ்சிலும்
முன்னழகாய் சுமப்பவள்
வானத்தை மேலும்
வனப்பை கீழும்
பின்னழகாய் சுமப்பவள்

காதல் கொண்ட பின்னால் நான்
கவிதை ஞானத்தைக் கற்றேன்
அவள் பின்னே சுற்றி வந்து
மானத்தை விற்றேன்

திரியாட்டம் நான் எறிந்தேன்
நரியாட்டம் அதிகாலை நான் எழுந்தேன்
திரும்பிக்கூட பார்க்கவில்லை
பரியாட்டம் நான் திரிந்தேன்

சரியான முடிவெடுத்துக்
கொடுக்கத்தான் நட்பு இல்லை
புரியாத காதலுக்கு
கொடுக்கத்தான் பூ இல்லை

காதலின் வலிதன்னை
காதலிக்குப் புரியவேண்டும்
என் கவிதையின் வலிதன்னை
கடவுளே நீ அறியவேண்டும்

எழுதியவர் : குமார் (19-Jun-16, 8:42 pm)
Tanglish : kavithaiyin vali
பார்வை : 810

மேலே