நீ வேண்டும்

நித்தம் நீ வேண்டும் - என்
நித்திரை கலைத்திடவும்
நீ வேண்டும்

விரல்கள் பிரிந்து தவிக்க
விரசலா வந்து இணைந்திட
வான்மதியே நீ வேண்டும்

மேனியெங்கும் ரோமங்கள் பரவிட
மேடு பள்ளமின்றி ஒன்றாக ஒன்றிட
மேலுலக தேவதையே நீ வேண்டும்

காலை மலர
கதிரவன் இசைத்திட
கருவிழி முத்தம் தந்திட
கண்ணம்மா நீ வேண்டும்.....!!!

எழுதியவர் : ராஜா (20-Jun-16, 7:29 am)
Tanglish : nee vENtum
பார்வை : 619

மேலே