பையா, பையா

பையா, பையா

@@@@@
யாரை தாத்தா பையான்னு கூப்படறீங்க?
@@@@@@@

எம் பேரனத்தாம் தம்பி கூப்படறென்.
@@@@@@@

உங்க பேரம் பேரு என்னங்க தாத்தா?
@@@@@@@

அவம் பேரு பையா தான்.
@@@@@@@

என்னங்க தாத்தா தன் மகனைக் கூப்படத்தான் பையான்னு சொல்லிக் கூப்பிடுவாங்க.
@@@@@

இல்ல தம்பி, இது தமிழ் பையா இல்லையாம். இந்திப் பையாவாம். ஒரு இந்தி தொலைக்காட்சி தொடர்லே ஒரு சின்னப்பொண்ணு ஒரு பையனை பையா, பையான்னு கூப்பிட்டுச்சாம். அத நல்ல இந்திப் பேரா இருக்கும் போல. எம் மவந்தான் எம் பேரனுக்கு
பையா-ங்கற பேர வச்சிட்டான்.
@@@@@

தாத்தா, இந்திலெ பையா –ன்னா சகோதரா –ன்னு அர்த்தம் தாத்தா.
@@@@

அப்பிடியா, சரி அந்தப் பேருக்கு நல்ல அர்த்தம்தா இருக்குது.

@@@@@

@@@@@@@@@@@@@@@@@@@
भैया (Bhaiya) = Brother
நன்றி: படம்:
ஃபோட்டோகிராஃபிஇன்தமிழ்பிளாக்ஸ்பாட்காம்

எழுதியவர் : மலர் (23-Jun-16, 4:32 pm)
பார்வை : 180

மேலே