வாழ்க்கை என்றால் ஆயிரம்

என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
இளமையில் தூங்க வேண்டும்
என்ற எண்ணம் தோன்றலாகாது

கிடைத்தது ஒரு வாழ்க்கை
கண்ணாடி பெட்டியிலே
உடைத்ததை போட்டுவிட்டால்
ஓடிப்போகும் திரும்பாதே....

மணித்துளி ஒவ்வொன்றும் மரணிக்குதே
எழும் ஒவ்வொறு அலையும் விழுகிறதே - நம்
மரணத்தை நினைவில் ஊட்டிடுதே
இளைமை ஒரு தேய்பிறை என்கிறதே..

அணுவாக அண்ட பயணத்தில்
அனைவரும் போட்டியை பார்த்துவிட்டோம்
ஆகையினால் இந்த வாழ்க்கையிலே
போட்டிகள் நமக்கொரு பொருட்டுமில்லை

வாழ்க்கையொரு வெள்ளை காகிதமே - அதில்
வரைந்துவிடு பல ஓவியமே
எழுதிவைத்த உன் ஓவியங்கள் - நீ
எரிந்தபின்னும் நிற்கும் காவியங்கள்

பூக்களெல்லாம் உதிர்ந்தால் கூட
பூச்செடி பூப்பதை நிறுத்துவதில்லை
நீயும் நானும் இறந்தால் கூட
பூமி சுற்ற மறுப்பதில்லை

உன் வாழ்க்கை உன் பையில்
உயர்வும் தாழ்வும் உன் கையில்...

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (25-Jun-16, 7:24 pm)
பார்வை : 420

மேலே