கொடிய நோய்

என் வியாதிக்குத்தான் தேவை ஓய்வு
உன் வியாதிக்குத் தேவையில்லை ஓய்வு!
உனக்கின்று ஏற்பட்டால் ...
அது உன் காதலுக்கு தோய்வு!

எனக்கு வியாதி முற்றியதால்
என் உறவினருக்கு தகவல் கொடுத்தேன்
காதல் வியாதி உனக்குள் முற்றும்வரை
நீ எவரிடமும் சொல்லிடாதே!

அடிபட்டவுடன் - நான்
மருத்துவ மனைக்குச் சென்றேன்
என் காயம் ஆற...!
உனக்கு படுகாயம் ஏற்பட்டும்
மருத்துவ மனைக்கு ஏன் செல்லவில்லை?

ஓ! உனக்கு உண்டானது
காதல் எனும் கடும் நோய் என்பதை
மறந்து விட்டேன் !

எழுதியவர் : கிச்சாபாரதி (25-Jun-16, 11:00 pm)
Tanglish : kodiya noy
பார்வை : 82

மேலே