அவன் அவள் அந்த இரவு

அவள் அவன் அந்த இரவு
=======================

மன்னிக்கணும்
முதல்முறை என்று தெரியும்தானே
அதுவும் சந்தர்பத்தினால்
அதனுடை அங்கலாய்ப்பில்தான்
உள்ளே வர
அனுமதி யாசிக்கவில்லை
வியர்வை குளித்த பொற்றாமரை ஏந்திக்கொண்டிருக்கிறாய்
ஒரு புருஷன்
அவன் நறுமணம் கொண்டு
ஸ்திரியை உணர்த்த முடியும்
என்றிருந்தால்
ஒருவேளை இந்த
மூன்றிழை நூற்கயிறுகள்
தடுக்கின்றனபோல்
என் புருஷவாசத்தை
நீ கருதுவதைக் காட்டிலும்
சக்தியுள்ளவை
இந்த நூல் கயிறுகள் தெரியுமா
சிலபோது, ஆயுசு முழுவதும்
ஒருவனுடைய ஆணத்துவத்தை கட்டி இட
இந்த மூன்றிழை நூல் போதும்
ஏழில் விழுந்த பொறி இது
இனி எரிந்து தீரும்வரை உண்டாகும்
சதா நீர்த் தளும்புகின்ற உன் கண்களில்
கடலாழம் உண்டு
இப்படி பார்க்காதே சிலபோது நான் ம்ம்
தவறி விழக்கூடும் ம்ம்
இரு வாடிய மல்லிகையை
உன் கூந்தலிலிருந்து அகற்றி விடுகிறேன்
நீர்த்த குங்குமத்தை
என் பூர்வ நெற்றியால்
ஒற்றி எடுக்கிறேன்
உன் விழி படர்ந்த அஞ்சனத்தை
இறகுகள் முளை விரல்களால்
அப்பிக் கொள்கிறேன்
மார்பு மூடிய பின்னங்கட்டை
அவிழ்த்துவிடுகிறேன்
உனக்கும்
என் ரேகைகளில் ஒழுகும்
தைலத்திற்கும்
ஒரே வாசம்தான்,,, நுகர்கிறேன் பார்
ஆண் புஷ்பங்கள் எங்கேயோ
யாருக்கும் அறியாமல்
வாசம் எழுப்புகின்றன
வா இத்தனை வாசங்களும் சேர்ந்து
உன் மேனியுடுத்திக் கொள்ளட்டும்
நினைத்துப் பார்த்தாயா
இத்தனை அழகானதா
வாழ்க்கை முழுமதுமாய்
சேர்ந்து பயணிக்கின்ற
ஒரு ஸ்திரியுடைய மார்புகள் என்று ம்ம்
குழந்தைப் பருவத்தில் (childwood)
தாய்மையுமாய்
சைசவத்தில் (teenage) இனிமையுமாய்
வளர் இளம் பருவத்தில் (adolescense)
குதூகலமுமாய்
யௌவனத்தில் (youth)
புருஷத்தன்மையை
முழுமை அடைய செய்வதுமாய் என ம்ம்
உன் நிறமார்புகளுக்குள்ள
துணிச்சல் அசாத்தியந்தான் ம்ம்
பிறவியுடைய முறிபாடு போலும்
பெண்ணினுடைய மேனிக்கு
எத்தனை அழகூட்டுகிறது
மர்மப்பள்ளத் தாக்குகளில் நிற்கும்
கந்தராஜ புஷ்பம்போல
பட்டும் பொன்னுமணிச் சரடும்
பாலும் பஞ்சாமிர்தமும் நல்கி இருத்திய
இச்சுவர்க்கட்டுகள்
உனக்கு தடவறைதான்
எனக்குத் தெரியும்
அது தகர்க்க எனக்கு முடியாது தான்
எனக்குத் தெரியும்
ஆனால் உந்தன் பெண்மையின்
எல்லைச் சுவர்க்கட்டுகளை
உடைத்தெறிவேன் எனக்குத் தெரியும்
ஒரு ஒற்றை நட்சத்திரம்
உந்தன் மேலுதட்டில்
மூக்குத்தியாகி முத்தமிடுவதை
நீ அறிந்திருக்கவில்லையா ம்ம்
நாகபுஷ்ப கந்தர்வ மாலை
உன் நீண்ட கழுத்தில்
நாகபடர் தாலியாக தவிழ
கண்டாமரை மிடுக்குகளோடு சேர
வேறு இழையினி இல்லை
உன்னை வர்ணிக்க
தோடு மட்டும் பாக்கி
அலுங்காதே
இதோ அணிந்துவிடுகிறேன் ம்ம்
கூந்தலில் முல்லைப்பூமாலை அழகுதான்
என்றாலும் இது
தலையில் வேண்டாமே
மார்பில் சூடிக்கொள்கிறேன்ம்ம்
சுற்றி எங்கிலும் சுகந்தம் பரவட்டும் ம்ம்
ஒவ்வொரு முறையும்
முத்தமிடும் போதும் முடிவில்
அங்கேயே தளர்ந்து ஓய்வெடுக்கட்டும்
வசந்தத்தில் வாகையாய்
முன் குளிர்க்காலத்தில் விசிகலமாய்
குளிர்க்காலத்தில் பசுமையாய்
இப்படி எல்லா காலங்களிலும்
மலர்களுக்கு ஒப்பாகிறாய்
ஆனால் உன்னில்தான்
எத்தனை எத்தனைப் பூக்கள்
நறும்புகின்றன ம்ம்
எத்தனை பூக்களின் நறுமணங்களில்தான்
நீ வீற்றிருக்கிறாய் ம்ம் ,,
உனக்குள் இப்படித்தான்
ஒரு தேவி உருவாகிறாள் ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (26-Jun-16, 4:39 am)
பார்வை : 405

மேலே