ஒப்பனைக்காரி உஜாலா

ஒப்பனைக்காரி உஜாலா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எதிர்பாராச் சந்திப்பு பணிமுடிந்து இல்லம் செல்லும் வழியில்.

@எதிரே நின்றவள் உலகப் பேரழகி. ஐஸ்வர்யா ராயின் அழகை மிஞ்சும்

@அழகோடு நகருக்கு நூறு பெண்கள், கிராமங்களில் ஒப்பனை செய்யாமல் பல பெண்கள் உண்டென்ற உண்மையை நம்மில் பலர்

@அறியாதிருப்பது நமது அறியாமையே. அவர்களில் பேரழகியாய் இருப்பவளும்

@இவள் அருகில் நின்றால் வெட்கப்பட்டு விலகிச் செல்வாள்.

@எதிரே தங்கச் சிலையாய் நின்றவள் அழகில் மயங்கிய நான் திகைத்து நின்றேன்

@சில நிமிடம் கற்சிலையைப் போல. என்னை நொக்கி அவள் ஒய்யாரமாய்

@நடந்து வந்தபோது, என் நெஞ்சல்லாம் படபடப்பு.
@@@@@@@@@@@

@”ஆடியபாதம் அய்யாவின் மகன் அன்பழகன் தானே நீங்கள்” என்றாள்”. ”என்

@தந்தையின் பெயரை எப்படி நீ அறிவாய்” என்று நான் கேட்ட கேள்வி இது. “என்

@தந்தையின் இளம் வயது நண்பர் உங்கள் தந்தை. பள்ளியிறுதி வகுப்பு வரை

@ இருவரும் ஒரே வகுப்பில் படித்த நெருங்கிய நண்பர்கள்.

@இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் எங்கள் வீட்டு வரவேற்பறையில்” என்று கூறினாள். நான் நம்பும்படி இருந்தது அவள்

@சொன்னது. என்னால் எதுவும் பேசமுடியாததால் மவுனமாய் நின்றிருந்தேன் அவள் அழகை ரசித்தபடி.
@@@@@@@@@@@@@

@எங்கள் இருப்பிட முகவரியைச் சரியாகச் சொனாள். “என் தந்தை வந்தவாசி

@வட்ட ஆட்சியர் வராகமூர்த்தி. எங்கள் குடியிருப்பு எழும்பூரில்.. இன்னும் ஒராண்டு

@என் முதுகலை இரண்டாம் ஆண்டு படிப்பு முடியும் வரை சென்னையில் தான் இருப்போம்.

@ வீட்டில் நீங்கள் இல்லாத நேரத்தில் என் தந்தை இருமுறை உஙகள்

@இல்லம் சென்று வந்து போது, வரவேற்பறைச் சுவரில் மாட்டி இருந்த உங்கள் அழகான புகைப்படத்தைப் பார்த்ததாகவும் என்னிடமும் என் அம்மா அழகரிசியிடமும் சொன்னார் பலமுறை.

@உங்கள் வீட்டு முகவரியையும் சொல்லி, ஒரு நாள் எஙகள் இருவரையும் உங்கள் இல்லம் சென்று உங்களையெல்லாம் பார்த்துவரச் சொன்னார்.

மேலும் சொன்னார், “ ஆடியபாதத்தின் ஒரே பிள்ளை அன்பழகன் அழகான பையன், நல்ல பணியிலும் உள்ளான்.

@ மாத வருமானம் 60,000. ஓரிரு மாதங்களில் நானும் உன் அம்மாவும் அன்பழகனை உனக்கு மணம் முடிக்க என் உயிர்த்தோழன்ஆடியபாததிடமும், அவன் மனைவி அழகரசியிடமும் பேசிவிட்டு வருவோம்.

இப்போது பணிச்சுமையாலும்
வடகிழக்குப் பருவ மழைக்காலம் என்பதாலும் அங்கு நாங்கள் சென்றுவர
வாய்ப்பேதும் இல்லை.” என்று பத்து நாட்களுக்கு முன்பே எங்களிடம் சொன்னார்.

@ஆர்வக்கோளாறினாலும், அடக்கமுடியாத ஆசையாலும் நீங்கள் இல்லம் செல்லும் வழியில் உங்களைப் பார்த்துப் பேச இன்று ஒரு மணி நேரமாய் காத்து நின்றிருந்தேன். நீங்களும் வந்தீர்கள்.

@உங்களையும் பார்த்து உங்களிடம் பேசிய நான் புண்ணியம் செய்தவள்”, என்று சொல்லி முடித்தாள் தன் அழகால் என்னை ஈர்த்த உலகப் பேரழகி உஜாலா.
@@@@@@@@@@@@@@@@

@அங்கு ஒரு கடையில் நின்றிருந்த என் உயிர்த்தோழன் தொல்காப்பியன்
என்னையும் அவளையும் செல்பேசியில் படம் பிடித்ததை ஒரு வாரம் சென்றபின்பே நானும் அறிந்தேன்.
@அன்று நான் பார்த்து ரசித்த அவள் தோற்றம் தமிழ்ப் பண்பாட்டின் சிகரமாய் என் கண்ணில் பட்டது.

@அப்போதே என்னையவள் அவளுடன் அவள் இல்லம் வர பலமுறை கொஞ்சி எனை அழைத்தாள்.

@அடடா, தேனினும் இனிய அவள் குரல் என் காதில் தேனமுதைப்
பாய்ச்ச மெய் சிலிர்த்து நின்றேன்.
@@@@@@@@@@@@@@

@பெண்களைப் பார்த்தாலே கூச்சப்படும் நான் “நாளை வருகிறேன்” என்று சொன்னதை அவளும் ஏற்றுக்கொண்டாள்.

@ பருவ மழைக்காலம் அல்லவா,
இல்லம் சென்றடைவதற்குள் கொட்டியது மழை பத்து நிமிடம்.

@அன்று குடையை எடுத்துச் செல்ல மறைந்தமைக்கும் கடையெதிலும் மழை நிற்கும்வரை காத்திருக்காமலும் விரைந்து நடந்து சென்ற எனக்குக் கிடைத்த தண்டனை.

வருண பகவானின் அன்பளிப்பு, நன்றாக நனைந்தபின் மழை நீர் சொட்டச் சொட்ட வீட்டிற்குள் நுழைந்தேன்.

@அம்மா என் தலையை துவட்டிக்கொண்டே என்னைத் திட்டித் தீர்த்தாள்.
@@@@@@@@@@@@@@

@அன்றிரவு காய்ச்சல் வந்து ஒரு வாரம் படுத்திருந்து நலமடைந்தேன். விடுப்பு

@முடிந்து அலுவலகம் அலுவலகம் செல்லும் நாளன்று வழக்கமாய்

@வராந்தாவில் வந்துவிழும் நாளிதழ்களை ஒரு புரட்டுப் புரட்ட, கையிலெடுத்தேன்.

@முதலில் எடுத்த நாளிதழின் தலைப்பு செய்தியே என்னை உலுக்கி உலுக்கி
அதிர வைத்தது.
@@@@@

@தென்னாட்டவரின் சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா சிவபெருமானே, என்னைத் தப்பிப் @பிழைக்க வைத்ததாயே”, என்று பதறியது என் மனம், நன்றியுணர்வுடனும்
@@@@

@“இருபது பேரை ஏமாற்றித் திருமணம் செய்த கல்யாண ராணி கனகா கைது” .

@இதுவே என்னை அதிரவைத்த தலைப்புச் செய்தி.

என்னை வ;லைவீசிப் பிடிக்கத் திட்டமிட்ட ’உஜாலா’வின் வண்ணப் படமும் அந்த நாளிதழில் அச்சாகி
இருந்தது.

தலைப்புச் செய்தியும் உஜாலா என்று தன் பெயரைச் சொன்ன அந்த வேசிப் பெண்ணின் படமும்தான் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

@ அன்று விடுப்பை இன்னும் ஒரு நாள் நீட்டிவிட்டு வீட்டிலேயே அதிர்ச்சியுடன் தங்கிவிட்டேன்.
@@@@@@

@என் நண்பன் அளகேசன் என் இல்லம் வந்தான் அன்று காலை11.00 மணிக்கு.

@காவல் துறையில் சி.ஐ.டியாக் பணியாற்றி வருபவன் அவன்.

@அவன் காட்டினான் என்னிடம் பல புகைப்படங்களை.

@உஜாலா ஒவ்வொரு நாளிலும் புதிய இளஞைன் ஒருவனோடு வெவ்வேறு
கவர்ச்சி ஆடையில்.

@புகைப்படங்களில் நெருக்கமாக இருப்பதுவே நான் கண்ட காட்சி.
@@@@@

@துப்பட்டா இல்லாமல் சுடிதாரில், துப்பட்டா தோளில் தொங்கும் ஆடையுடன், தொப்புளும் வயிற்றின் பெரும்பகுதியும் தெரியுமாறு
புடவை அணிந்து முக்கால் முதுகு தெரியும் ரவிக்கையுடன் (ப்ளவ்ஸ்), அரை வயிறு தெரியும் மேலாடையுடன் கால்களை இறுக்கமாய்ப் பிடிக்கும் முழுக்கால் ஆடையுடன், இடுப்பிலிருந்து பாதம்வரை கால்களின் வடிவம்
துல்லியமாய்த் தெரியும் மெல்லிய காலாடையுடன், மார்பு பகுதியில் தேவைக்கு மீறி கீழிறங்கிறய ரவிக்கையுடன், மார்பை சரியாக மறைக்காத மாராப்புடன்,,

@இன்னொரு படத்தில் குட்டைப் பாவாடையுடன் தொடையின்
நடுத்தொடையிலிருந்து பாதம்வரை கால்களின் உண்மை நிறம் பளிச்சென்று தெரியும் ஆடையுடன், அவள் பலவித ஆடைகளில் பல்வேறு இளைஞருடன் கண்ட கண்ட இடங்களில் ஒய்யார நடையில் ஊரலம் வரும் காட்சிகள்.

இப்படி
எத்தனையோ படங்கள்.
@@@@@@

@நண்பன் அளகேசன் சொன்னான்: ”நீ பார்த்ததெல்லாம் நான் எடுத்த
புகைப்படங்கள். அந்தப் பெண் பல்வேறு பெயர்களைக்கூறி பல்வேறு கவர்ச்சி
ஆடைகளை அணிந்து சபலப் புத்தி இளைஞைர்கள் பலரிடம் சல்லாபம் புரிந்து ஒருவருக்கொருவர் தெரியாதவாறு 5 ஆண்டுகளில் 20 பேரை மாதம் ஒருவரை மணந்து அவருடன் சில நாட்கள் மட்டுமே வாழ்ந்துவிட்டு கிடைத்ததைச்
சுருட்டிக்கொண்டு அண்டை மாநிலம் சென்று பதுங்கிக் கொள்வாள்.

@ 10 நாட்கள்
ஆனபின் வேறொரு பெயருடன் மாநகரின் ஒரு புதிய பகுதியில் வந்து
தங்குவாள்.

@அவளுக்கு இளிச்சவாய் இளைஞர்கள் பற்றிய தேவையான
தகவல்தர கூலிப்படை ஒன்றையும் வைத்திருக்கிறாள்.

@ஏமாந்த மாட்டியஜொள்ளுப் பேர்வழிகளை அவள் அழைத்துச் சென்று காமக் களியாட்டம் நடத்தி
ரகசியமாய்ப் படமெடுத்து விடுவாள்.

@பின்பு படத்தைக் காட்டி அவர்களை
மிரட்டிப் பணம், தங்க நகை போன்றவற்றைப் பறிப்பாள்.

@முடிந்தால் தனது போலிப் பெற்றோரைக் காட்டி அவள் வேசித்தனப் புகைப்படத்த்தில் மாட்டிய
ஒருவனை கோயில் ஒன்றில் வைத்து மணம் புரிந்து கொள்வாள்.

@இப்படி ஏமாந்தவர்கள் மொத்தம் 20 பேர்.

@நல்லவேளை நீ அவளை எதிர்பாராமல் சந்தித்தது என் கண்ணில்
பட்டதால் என் கண்காணிப்பு செல்பேசியில் படமெடுத்துவிட்டேன்.

@உனக்கு
எச்சரிகை அடுத்த நாள் செய்யலாம் என்றிருந்தேன். நீயோ காய்ச்சலுடன்

@வீட்டில் படுத்திருப்பதாய் தகவல் கிடைத்தது. அடுத்த ஐந்தாவது நாளில் மாலை

@ஏழு மணி அளவில் அவள் ஒரு கவர்ச்சி உடையணிந்து இன்னொரு சல்லாப

@இளிச்சவாய் இளைஞனிடம் வேசித்தனம் செய்ய அவள் அறைக்கு அழைத்துச்

@சென்றவுடன் பின் தொடர்ந்த எங்கள் 5 பேர் கொண்ட எங்கள் படை

@கையும் களவுமாக அவளையும் அந்த இளைஞனையும் பிடித்தோம். எச்சரிக்கை

@செய்தபின் அவனை அனுப்பிவிட்டு பலபெயர்களுடன் பலபேரை ஏமாற்றிய

@ஊர்மிளாவை மகளிர் காவல் நிலையமொன்றில் லாக்கப்பில் வைத்தோம்.

@இன்று காலை தான் அவளை புழல் சிறையில் ஒப்படைத்துவிட்டு நேராக உன்

@இல்லம் வந்தேன் உன் உடல்நலனையும் மனநலனையும் விசாரிக்க. அந்த

@பலபெயர்களைக் கொண்ட பத்தினி பிறந்து வளர்ந்தது படித்ததெலலாம்

@சென்னையில் தான். அதனால் அவள் தமிழைப் பிழையின்றி எழுதுவும்

@படிக்கவும் பேசத் தெரிந்தவள். ஆனால் அவள் தாய்மொழி தமிழ் அல்ல.

@அண்டை மாநிலத்துக்காரி. அவள் அம்மா செய்த ’அரும் பணி’யைத்தான்

@இவளும் தொடர்ந்தாள். இவளின் தந்தை யாரென்றே இவளுக்குத் தெரியாது.

@இவள் அம்மா இப்போது பாளையங்கோட்டைச் சிறையில் கம்பி

@எண்ணிக் கொண்டிருக்கிறாள். இவளது கூலிப்படை ஆட்களில் சிலரை கைது

@செய்துவிட்டோம். இன்னும் சிலர் சில நாட்களில் பிடிபடுவார்கள். நண்பா

@அன்பழகா. அவள் அழைத்தவுடன் அவளோடு நீ சென்றிருந்தால் அப்பாவி நீயும்

@பலியாகி இருப்பாய்.
@@@@@@@@@@@@@

@அவள் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக் கொண்டிருந்தால்தான்

@அவளைக் கையும் களவுமாகப் பிடிக்க எங்களுக்கு அதிக நாட்கள்

@தேவைப்பட்டது. உன்னைக் காப்பாற்றிய மகிழ்ச்சியுடன் செல்கிறேன். எனக்கு

@பதவி உயர்வும் இன்னும் சில நாட்களில். வாழ்க வளமுடன் அன்பழகா,

@வருகிறேன் உனைப்பார்க்க பதவி உயர்வு கிடைத்தவுடன்”.
@@@@

@அன்பழகனும் தன்னை மானக்கேட்டிலிருந்து காப்பாற்றிய தன்னுயிர்

@நண்பனுக்கு நன்றியுடன் விடைகொடுத்து அனுப்பிவைத்தான். தன் கூச்ச

@சுபாவமே தன்னைக் காப்பாற்றியது பற்றி நிம்மதி பெருமூச்சுவிட்டான்.
@@@@@@@@@@@@@@@@@@@

(இது அவசரக் கோலத்தில் 20 நிமிடங்களில் எழுதியது. அச்சிடத்தான் ஒரு மணிநேரம் ஆனது. அச்சிடும்போதே சில மாற்றங்களைச் செய்ததே அதற்குக் காரணம். கதையின் கரு: கேரள கல்யாண ராணி ஒருத்தி தமிழகத்தில் செய்த லீலைகள் பற்றியும், தமிழகத்தைச் சேர்ந்த கல்யாண மன்னன் ஒருவன் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பல பெண்களை மணந்து அவர்களில் பெரும்பாலோரின் நகை, பணம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு சிலரைக் கொலை செய்தது பற்றியும் நாளிதழ்களில் வந்த செய்தியும்)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

उजला = Ujala (Noun) = LIGHT, SUNNY (Adjective)


اجالا – in Urdu = Light Of The Universe.

In Sanskrit the baby girl name Ujala is also used as a boy name.
Hindi Meaning of Ujala : Prakash
English Meaning of Ujala : Lighting
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி: உஜாலாவின் பொருள் அறிய பல வலைத் தளங்கள்.

எழுதியவர் : மலர் (26-Jun-16, 3:08 pm)
பார்வை : 263

மேலே