அன்பெனப்படுவது யாதெனில்

(மழைக் கால மத்தியில், ஒரு மதிய நேரம், காதலர் இருவரின் சந்திப்பு)

கதிர்---:---வெள்ளி வெள்ளி கொளுசுமணி
---------------என்ன இங்க அழைக்குதடி
---------------நான் பாடும் பாட்டுனக்கு
---------------கேக்குதா கேக்குதா
---------------அத்த மகளே........
---------------என் அத்த மகளே.

மலர்---:---கேக்குதே........., என்ன மச்சான் இன்னிக்கு பாட்டெல்லாம் பாடுறீங்க........

கதிர்---:---(சிரித்துக்கொண்டே)

---------------உன் அழகு முகம் பார்க்கவே
---------------ஒரு வரமொன்னு வாங்கவே
---------------நாளெல்லாம் மலையேறி
---------------தேஞ்சு போச்சு நிலவு

மலர்---:---மலையேறித் தேயுதா...........ம், அப்புறம்.......

கதிர்---:---நெல்லு வெளையும் நெலத்துல
---------------உன் பாதம்படும் பதத்துலயே
---------------பொன்னாக விளையுமுன்னு
---------------காத்துக்கெடக்கு ஊரு

மலர்---:---ஓ....!, அப்படியா.............
கதிர்---:---ஆமாம் !.....

---------------ஊரக் காக்கும் சாமி
---------------உன்னப் பாக்கத்தானே
---------------தேரேறி நாளெல்லாம்
---------------வாரதென்ன கூறு

மலர்---:---சாமி...... வார மாதிரி தெரியல, வேறெதோ ஒரு ஆசாமி மாதிரிதான் தெரியுது......?

கதிர்---:---மயிலாடும் பாற
---------------பக்கத்தில ஓட

மலர்---:---நிறுத்துங்க........., இந்த பாட்ட நான் எங்கயோ கேட்டிருக்கேன்.....?

கதிர்---:---அப்படியா, இப்ப பாரு.......
---------------ஓடத்தண்ணி மேல நிக்கும்
---------------கொத்தித் திங்கும் கொக்குகூட்டம்
---------------உன்னக்காண ஒத்தக்காலில்
---------------தவங்கெடக்குது பாரம்மா.

மலர்---:---ஏம்மச்சான், பாட்டுல வரவர சுதி எறங்குது.........

கதிர்---:---ம்.........., இதக் கேளு........!

---------------பாரி தேரேறி முல்லக்கொடி
---------------கொத்துக் கொத்தாப் பூத்தாலும்............. (பாரி....)
---------------உன் குழலேறி நின்னாத்தான்
---------------ஊரெல்லாம் மணக்குது

இது எப்படி....?

மலர்---:---இப்ப பரவால்ல............
மச்சான், வரும்போது கொளுசப்பத்தி பாடுனீங்கள்ள.....
இங்க பாருங்க புதுக் கொளுசு.....!
எங்க அப்பா வாங்கிக்குடுத்தது..........

கதிர்---:---அதான், ஜல்ஜல் சத்தம் கெணத்துமேட்டுவரைக்கும் கேட்டுதா.......
மலர்---:---என்ன.......?

கதிர்---:---இல்லம்மா, நல்லார்க்கு, நல்லார்க்குனு சொன்னே,

மலர்---:---அதான்ன பாத்தேன்.....

கதிர்---:---உன் கெண்டக் காலு அழகெல்லாம்............ (உன்....)
---------------அதில் ஆடுங் கொளுசு ஒலியெல்லாம்
---------------பாத்துக் கேட்டு ரசிக்கத்தான்
---------------நான் பொறந்தேனோ......!

மலர்---:---(செல்லமாக முறைக்கிறாள்)

கதிர்---:---உன் கெண்ட காலழகப் பாத்துத்தான்
---------------கெண்ட மீனு சொன்னது
---------------அந்தக் கெண்ட மீனு சொன்னது.....

மலர்---:---(சிரித்தவாறே, கதிரின் காதைத் திருகி)
கெண்ட மீனு சொல்லுதா...........

கதிர்---:---கெண்ட மீனு சொன்னது
---------------அந்த மேகம் காதில் விழுந்துச்சான்
---------------மழையாகப் பொழிஞ்சே தான்
---------------எறங்கி வரப் பாக்குது..........

மலர்---:---வரும், வரும்..................

கதிர்---:---ஆமாம், பாரு மழை வர மாதிரி இருக்கு. வா, போலாம்.

மலர்---:---ஐயோ....., மெதுவாப் போங்க.
(மலரின் கையினைப் பற்றி இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தான் கதிர், மழையும் அவர்களை விடாது தூவத் துவங்கியது. சிறிது நனைந்தவாறு, அங்கிருந்த கொட்டகையில் புகுந்தனர்)

கதிர்---:---ஊரக் கடக்கும் மேகக் கூட்டம்
---------------எல்லாம் எறங்கி வருதம்மா
---------------உன் அழக ரசிக்கக் கூடுதம்மா.....

(மலரை அணைத்துக்கொண்டே)

---------------உன் அழக ரசிக்க..............
---------------கூடுதம்மா......

மலர்---:---காதல் கடலேறிப் போகும்
----------------படகோடு நாமும்
----------------நாள்தோறும் சேர்ந்தேதான் போவோமா
----------------நாள்தோறும் சேர்ந்தேதான்..........
----------------போவோமா..........
(மலர், நாணத்தில் கதிரின் நெஞ்சத்தில் முகம் புதைத்தால். காதலில் கரைந்தனர் இருவரும்)
- செ. கிரி பாரதி.

எழுதியவர் : செ.கிரி பாரதி (29-Jun-16, 3:17 pm)
பார்வை : 381

மேலே