ஆங்கன்

வணக்கம் அய்யா

@@@
தம்பி நீங்க.....?
@@
அய்யா எம் பேரு முத்தையன். நான் பத்து வருசத்துக்கு முன்னாடி நீங்க இந்தி ஆசியரியரா வேலை பாக்கற பள்ளிலே படிச்சவனுங்க. இப்ப தனியார் நிறுவனத்திலே வேலை பாக்கறனுங்க.
@##
சரி தம்பி முத்தையன். இப்ப யாரை ஆங்கன்-னு கூப்பிட்டீங்க?
@@#
எம் பையனத்தாங்க.
@#
தம்பி முத்தையா, இந்தி ஆசிரியரா இருக்கற நானும் தமிழன் தா. ஆனா எம் பையனுக்கு அருளாளன்-னும் எம் பொண்ணுக்கு அருள்மொழி-ன்னும் பேரு வச்சிருக்கேன். ஆங்கன்-னா முற்றம்-னு அர்த்தம் முத்தையா. எல்லாம் அங்காளன், அங்கப்பன்-னு தாம் பேரு வைக்கறாங்க. நீங்க ஆங்கன்-னு...
@#
அய்யா பேரோட அர்த்தம் முக்கியமில்லீங்க. இந்திப் பேரா இருந்தா சரிதானுங்க
@@@
சரி முத்தையா. இனி நா ஒன்னும் சொல்றதிக்கில்ல.
####

எழுதியவர் : மலர் (30-Jun-16, 1:45 am)
பார்வை : 89

சிறந்த நகைச்சுவைகள்

மேலே