பங்கஜ் மேனன் நடிகையாகிறார்

வாம்மா. என்னோட துணை இயக்குநர் துரைராசு சிபாரிசு பண்ணினதால தான் உன்ன அழச்சிட்டு வரச்சொன்னேன். நீ ரொம்ப அழகா இருக்கறே. நீ நல்லா நடிக்கறன்னு சொன்னாரு துரைராசு. உனக்குத் தமிழ்ல பேச வராதுன்னு தெரியும்.பரவால்ல. இப்பெல்லாம் தமிழ்ல நடிக்கற எந்த கதாநாயக நடிகையும் தமிழ்ல பேசறதில்ல. பின்னணி குரல் தான் அவுங்களத் தூக்கிவிடுது. சரி. உன்னோட வெவரத்தையெல்லாம் சொல்லு.
@@@
எண்ட பேரு பங்கஜ் மேனன். அச்சன் அசோக் மேனன். ஐபிஎஸ் ஓஃபிஸர். என்ட அம்மை அர்ச்சனா மேனன். ஐஏஎஸ் ஓஃபிஸர்.

@#@

சரிம்மா. பங்கஜ்-ன்னா தாமரை-ன்னு அர்த்தம். மேனன்-ங்கறது என்ன?
@#@
என்ட ஜாதிப் பேரானு.
@#@

சரிம்மா. என்னோட 25 ஆவது படம் ’ஓடிப் போய் கல்யாணம் செஞ்சுக்கலாம்'. இந்தப் படத்ல பிரபல நடிகர் பீச்வா தான் கதாநாயகர். நீ தான் அறிமுக கதாநாயகி. வாழ்த்துக்கள்.

@#@

நன்னி சாரே!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சாதிப் பெயரைத் தவறாக் குறிப்பிடுவதாக யாரும் நினைக்கவேண்டாம். தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அரசு/தனியார் நிறுவனப் பணிகளில் இருப்பவர்களில் 0.5% பேர்கூட தங்கள் பெயர்களுடன் சாதிப் பெயர்களை இணைத்துக்கொள்வதில்லை. ஆனால் பிற மாநிலங்களில் இன்றும் பெரும்பாலான அரசு/ தனியார் துறை அதிகாரிகள், தொழில் அதிபர்கள், நாடறிந்த/உலகறிந்த விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், எழுத்தாளர்கள்
ஆகியோரில் பலரும் தங்கள் சாதிப் பெயர்களை தங்கள் பெயர்களுடன் இணைத்துக் கொள்வது நடைமுறையில் உள்ள உண்மை. அதைச் சுட்டிக்காட்டவே இந்தப் படைப்பு. சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (30-Jun-16, 1:05 pm)
பார்வை : 92

மேலே