கருப்புதான் பிடிச்ச கலரு

பரந்தாமன் பச்சோந்தியா? என்று கேட்கும் அளவுக்கு நாம் வணங்கும் பரந்தாமன் கூடவா அவ்வப்போது தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறார் என்ன கொடுமை ஸார் இது? என்று கேட்க தோன்றுகின்றது அல்லவா?
, பாற்கடலில் அனந்தசயனம் கொண்டிருக்கும் பரந்தாமன், படைப்பு தொழில் புரியும் பிரம்மாவுக்கும், அவரது மனைவியான சரஸ்தேவியின் கண்களையும் மறைத்து இப்படியெல்லாமா தம்மை மாற்றிக் கொள்வார்!
வெண்மை நிறமாக, கிருதயுகத்தில் காட்சியளித்தாராம்
பொன் நிறமாக திரேதாயுகத்தில் காட்சியளித்து அருள்புரிந்தாராம்
பச்சை நிறத்தில் ”பச்சை மாமலை போல் மேனி” என்று ஆழ்வார் பாடியது போலவே தம்மை மாற்றிக் கொண்டாராம்.
இப்பொழுது நாம் வாழும் கலிகாலத்தில் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்பது போல, பரந்தாமன் கருப்பு.நிறத்தில் காட்சியளிக்கிறாராம். இதையெல்லாம் நான் சொல்லவில்லை.

” நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று
இறைஉருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவுடைய
நாமங்கை தானும் நலம்புகழ் வல்லனே
பூமங்கை கேள்வன் பொலிவு
இப்படி பாடலாக பரந்தாமனுக்கு புகழாரம் சுட்டியவர் பேயாழ்வார். இந்த பாடலை மூன்றாம் திருவந்ததாதியாக பாடப் பெற்றுள்ளர்..


திவ்ய பிரபந்தம் நூலில் இருந்து -- கே. அசோகன்.

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (30-Jun-16, 7:48 pm)
பார்வை : 119

சிறந்த கட்டுரைகள்

மேலே