கோபித்துக் கொள்ளாதே

விடைபெற வேண்டிய நேரம் வந்தது என்று எச்சரிக்கை மணி ஒலித்ததோ என் கவிதையே...!!!

சத்தம் இல்லாமல் விலகிக் கொள்ள என் மனதிற்குத் தெரியவில்லை...

குற்றவுணர்ச்சி என்னை உன் முன்னால் மண்டியிட செய்கிறதடி..
இதயத்தில் பாரம் உணர்கிறேன்..

காதலின் ஒருவித விந்தையை தற்சமயம் உணர்ந்தேன்...
விலகிச் செல்லும் நேரத்தில் பாரம் கூடுகிறதே தவிர குறையவில்லை அறிவியலுக்கு மாறாக...!!

சுமை அனைத்தும் நீ என் மேல் வைத்த காதலா... ??
இவ்வளவு கணமாக உள்ளது!!!.

உலகத்தில் மிக உயர்ந்தது கண்ணீர்த்துளி...
அவை உனக்காக என் இமை வாசலை தாண்டுகிறது...!!

பத்திரமாக பார்த்துக்கொள் நம் நினைவுகளை..!!
உனக்காக நான் ஒன்றும் செய்யவில்லை...
மன்னித்து விடு என்னை என்று கேட்க முற்படும் வேளையில் உன் முகம் வேண்டாம் என்று எனக்குள் சப்தம் செய்கிறது..

உன் விரல்களிடம் சொல்லிவிடாதே நாம் விலகி விட்டோம் என்று... பாவம் அவை ஏங்கி போகும்... என் முதல் ஸ்பரிசம் பட்டது உன் விரல்களில்...

உன் நினைவுகளை எனக்கான காதல் பரிசாய் என்னுடன் எடுத்துச் செல்கிறேன்..

கோபித்துக் கொள்ளாதே!!!

எழுதியவர் : Shetra (1-Jul-16, 1:37 am)
Tanglish : kobitthuk kollathe
பார்வை : 904

மேலே