சுருத்தியோ துருத்தியோன்னு சொன்னாடி

ஏண்டியம்மா பட்டணத்திலெ உங்கூட படிக்கற பொண்ண நம்ம ஊர் திருவிழாவுக்கு அழச்சிட்டு வந்திருக்க. உம் பேரு என்னடின்னடின்னு கேட்டன். அவ தன்னோட பேர சுருத்தியோ துருத்தியோன்னு சொன்னாடி கருப்பாயி. அவ என்ன இந்திக்காரப் பொண்ணா.?

பாட்டி அவ பேரு ஸ்ருதி. அவளும் தமிழச்சிதான். தஞ்சாவூர்க்காரி. இப்பெல்லாம் சினிமா ரசனையிலே பிள்ளைங்களைக்கு இந்திப் பேருங்களுக்கத்தாம் வைக்கறாங்க. எனக்கு நீங்கெலலாம் நம்ம குலதெய்வம் கருப்புசாமி பேரா இருக்கட்டும் இன்னு செவப்பா, அழகா இருக்கற எனக்குப் போயி க்ருப்பாயின்னு பேரு வச்சீட்டீங்க. நா படிக்கற எடத்ல எல்லாரும் ”என்னடி இவ்வளவு செவப்பா அழகா இருந்துட்டு கருப்பாயிங்கற பேர வச்சிட்டு இருக்கற. கருப்பா இருக்கற பொண்ணுங்களுக்கூட ஸ்வேதா (வெள்ளச்சி)ன்னு பேரு வைக்கறாங்க”ன்னு சொல்லி என்ன கிண்டல் பண்ணறாங்க பாட்டி.

அடியே அழகுச் செல்லம் கருப்பாயி. நம்ம ஊரு வழக்கப்படி ஒரு வீட்டில பொறக்கற மூத்த கொழந்தைக்கு நம்ம குலதெய்வத்தின் பேரத் தாண்டி வைக்கணும் . இல்லன்ன அந்த சக்திவாய்ந்த கடவுள் நம்மளத் தண்டிச்சிருண்டி.

பாட்டி அந்த சாமி என்னத் தண்டிச்சாலும் பரவால்ல. இப்பெல்லாம், ஆத்துவி, கொளத்துவி, ஏரிவின்னெல்லாம் அர்த்தம் தெரியாத எந்த மொழிக்கும் தொடர்பில்லாத பேரையெல்லாம் பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க. நானும் கருப்பாயிங்கற பேர கர்ப்பாய்ஜி -ன்னு மாத்திக்கப் போறேன். அதுக்கு அர்த்தம் இருக்குதோ இல்லையோ இந்திப் பேரு மாதிரி இருக்குதே அது போதும் பாட்டி.

என்னமோ பண்ணுக்கடி கருப்பாயி. எனக்கென்ன வந்தது. ஆனா நீ செய்யறது சாமி குத்தம்.

போங்க பாட்டி இனிமே என்ன கர்பாய்ஜி -ன்னு கூப்புடுங்க.

சரிடி கருப்பாய்ச்சி.

எழுதியவர் : மலர் (2-Jul-16, 11:34 am)
பார்வை : 122

சிறந்த நகைச்சுவைகள்

மேலே