என்னடி உம் பையனை பாஞ்சு, பாஞ்சு-ன்னு கூப்படற

ஏண்டி ஏத்தாபூருக்காரி என்னடி உம் பையனை பாஞ்சு, பாஞ்சு-ன்னு கூப்படறே. நம்ம ஊர்லே
தீப்பாஞ்சம்மன் -ன்னு ஒரு சாமி இருக்குது. எங்க ஊரு மருமகளா வந்ததனால அந்த அம்மன் பேர அவனுக்கு தீப்பாஞ்சான் -ன்னு

வச்சிட்டு அவன பாஞ்சு, பாஞ்சு-ன்னு கூப்படறயா?
###
பாட்டி எனக்கும் தீப்பாஞ்சம்மன் சாமி மேல பக்தி இருக்குது. வாரத்துக்கு ஒரு நாளைக்கு அந்த அம்மன் கோயிலுக்குப் போய்ட்டு

வந்தாத்தான் எனக்கு மனசு நிம்மதியா இருக்கும் பாட்டி.
###
சரி, அந்த பாஞ்சு, பாஞ்சு எல்லாம் எதுக்குடி?
###

பாட்டி காலு கையில மொத்தம் இருபது வெரல்கள் தான் இருக்கணும்.
##
ஆமா
###
ஆனா எம் பையனுக்கு ஒவ்வொரு கால்லயும் கையலயும் ஆறு வெரல்கள் இருக்குது. மொத்தம் அவனுக்கு 24 வெரலுங்க.

கிராமத்துல பசங்க பொண்ணுங்களுக்கெல்லாம் ஏதாவது பட்டப் பேர வச்சிருவாங்க. கருவாயன் , கருவாச்சி, மீனுவாச்சி,

மொட்டையன், குட்டையன்னெல்லாம் பேரு வச்சிடறாங்க. எம் பையனுக்கு ஆறுவெரலன் -ன்னு பேரு வச்சிருவாங்களோ

என்னவோன்னு தான் அவுனுக்கு பாஞ்ச்-ன்னு இந்திப் பேர வச்சன். பாஞ்ச்-ன்னா அஞ்சு- ன்னு அர்த்தம் பாட்டி.
@#@
அடி போடி ஏத்தாப்பூரு ஏகாம்பரம்.. அஞ்சு -ன்னெல்லாம் பேரு வக்கறதா?
###
இல்ல பாட்டி தமிழ்ல உரிச் சொல்னு சொல்லப்படற வார்த்தைங்களக் கூட இந்திக்காரங்க பேரா வச்சிருவாங்க. அழகான


குழந்தைன்னு சொல்லறதிலே அழகானங்கற வார்த்தை தான் உரிச்சொல். அந்த வார்த்தையை க்கூட இந்திக்காரஙக ’அழகான’. ’அழகிய’

-ன்னு ஒரு கொழந்தைக்குப் பேரு வச்சிருவாங்க. நாமெல்லாம் அழகி -ன்னு தாம் பேரு வைப்பொம். அழகான-ன்னு பேரு

வைக்கமாட்டோம். இந்த காலத்ல இந்திப் பேருங்கள் வைக்கறதானே தமிழர் நாகரிகம், அதனால தான் நா எம் பையனுக்கு பாஞ்ச் -

ன்னு பேரு வச்சிட்டேன். என்னோட வீட்டுக்காரரும் பி.ஏ. வரைக்கும் படிச்சவர்தானே. அவரும் பாஞ்ச் நல்ல பேருன்னு

சொல்லிட்டாருங்க பாட்டி.
@@@@@
அடி போடி உங்க பாஞ்சும் பஞ்சும் நஞ்சும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
पन्च (Panch ) = ஐந்து படம்:.டமில்ஃபோர்ஹெல்த்காம்
@@@@@@@@@@@@@@@@@@@

சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.
@#@
எம் மொழி செம்மொழி
சீரிளமை குன்றா
உலகின் முதன் மொழி!

எழுதியவர் : மலர் (2-Jul-16, 11:49 pm)
பார்வை : 223

மேலே