மண்ணுச்சுக்கு, மண்ணுசுக்கு

மண்ணுச்சுக்கு, மண்ணுசுக்கு
@@@@@@@@@@@@
என்ன பாட்டிம்மா அரைமணி நேரமா மண்ணுச்சுக்கு, மண்ணுச்சுக்குன்னு

கத்திட்டு இருக்கறீங்களே. வயித்த வலிக்குதா? அதுக்குத்தான் சுக்கு

கேக்கறீங்களா? சுக்கு வேணும்னு சொன்னா பக்கத்தூட்டுக்காரியான

நானே எடுத்துட்டு வந்திருப்பேன். மண்ணுச்சுக்குனு சொல்றீங்களே. சுக்கு

மண்ணிலயா வெளையுது. இஞ்சி தாம் பாட்டி மண்ணுல வெளையுது.

இஞ்சியத்தானே காயவச்சு சுக்கு ஆக்கறாங்க.
@@@
அடி போடி செவத்தவளே செந்தமாரை. ஏண்டி நா பல வருசம்

விவசாயம் பாத்துட்டு இப்பத்தாண்டி வயசான காலத்திலெ இந்தப்

பாழாப் போன பட்டணத்துக்கு வந்திருக்கேன். நீ போயி சுக்கு எப்பிடி

தயாராகுதுன்னு எனக்குச் சொல்லித் தர்றயா?

@@@@@@@@@@@
பின்னே எதுக்குப் பாட்டிம்மா மண்ணுச்சுக்கு, மண்ணுசுக்குன்னு அரை

மணிநேரமா சத்தமா கத்திட்டு இருக்கறீங்க?
@@

அடியே செவத்தவளே செந்தாமரை, எம் பேரப் பையன் மண்ணுச்சுக்கு

எங்க போனானோ தெரில. நானும் அவம் பேர மண்ணுச்சுக்கு,

மண்ணுச்சுக்குன்னு அரமணிநேரமா கத்திக் கூப்புட்டு எந் தொண்டையே

வறண்டு போச்சுடி. நீ அவன எங்காவது பாத்தயாடி?


@@@@

அடடா, உங்க பேரனத்தாம் மண்ணுச்சுக்கு, மண்ணுச்சுக்குன்னு கூப்புட்டுட்டு

இருந்தீங்களா?
@@@

ஆமாண்டி அறிவு கெட்டவளே. அவம் பேரு மண்ணுச்சுக்கு தாண்டி.

@@@@@@@@
பாட்டிம்மா அவம் பேரு மண்ணுச்சுக்கு இல்ல. மன்சுக்.

@@@@

அது என்னடி பேரு வாயில நொழையாத பேரு. எம் மவனும் மருமகளும்

ஊட்டுக்கு வரட்டும். அவுங்களப் படிக்கவச்சு என்ன பிரயோசனம். பெத்த

புள்ளைக்கு நல்ல தம்ழ்ப் பேரக்கூட வக்கத் தெரியாத கூமட்டைங்க.

வரட்டும் இன்னிக்கு நாக்கப் புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேட்டு

நலலா மொத்திவிடறேன்.

@@@@
பாட்டி மன்சுக் –ங்கறது இந்திப் பேரு. அதுக்கு மன அமைதி

கொண்டவன்,மகிழ்ச்சியாக இருப்பவன், மனமகிழ்ச்சி- ன்னு சில

அர்த்தமெல்லாம் இருக்குது பாட்டிம்மா.
@@@

அந்த அர்த்தங்களைத் தூக்கி குப்பையிலெ போடுங்கடி. தாயில்லாக்

கொழந்தைக்கு புட்டிப்பாலக் குடுக்கலாம். பெத்தக் கொழந்தைக்கு

தாய்ப்பாலக் குடுக்காம புட்டிப்பாலக் குடுக்கவற எல்லாம்

பொம்பளையாடி. பிள்ளைங்களுக்குப் பேரு வைக்கறதும் அப்படித்தாண்டி.

நம்ம ,மொழிலெ ஆயிரக்கணக்கான் அழகான பேருங்க இருக்கற போது

நமக்கு சம்மந்தமில்லாத பேரையெல்லாம் பிள்ளைஙகளுக்கு வச்சி

நம்மள நாமளே அசிஙகப்படுத்திகிறது நல்லாவா இருக்குது?
@##

இதையெல்லாம் உங்க மகங்கிட்டயும் மருமக லதா-கிட்டயும் (லதா =

கொடி) சொல்லுங்க. நான் எம் பொண்ணுக்கு பொன்மணி-ன்னு அழகான

பேர் வச்சிருக்கேன் பாட்டிம்மா.
@@@

நீ தாண்டி உண்மையிலேயே படிச்சவ.!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மன்சுக் என்ற பெயர் தொலைக் காட்சி செய்தியில் கேட்டேன்; ஆங்கில நாளிதழ் ‘The Hindu’ விலும் பார்த்தேன்.
Mansukh మనసుఖ; ਮਨਸੁਖ; মনসুখ; மன்சுக் മനസുഖ; મનસુખ; ಮನಸುಖ; मनसुख =
One with peace of mind; Happy one, Pleasure of mind
நன்றி: இண்டியாசைட்னேம்ஸ்காம்.
படம்: நன்றி : குளக்கட்டாக்குறிச்சி ...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சிந்திக்க. மொழிப்பற்றை வளர்க்க.
***************************************************************************************
எம்மொழி செம்மொழி
சீரிளமை குன்றா
உலகின் முதன் மொழி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆர்வம் இருப்பின் பார்க்கவும்: ஆய்வுக் கட்டுரை - எண்: 257360. ஆதிப் பெற்றோர் தமிழர்களே

எழுதியவர் : மலர் (5-Jul-16, 3:29 pm)
பார்வை : 150

மேலே