மன்னிச்சு மன்னிச்சு சிரி

பாட்டிம்மா யார மன்னிச்சிங்க?
@#@
நா யாரடி செந்தாமரை ஒருத்தர மன்னிக்கறதுக்கு?
@#@
பின்ன எதுக்குப் பாட்டிம்மா, மன்னிச்சு, மன்னிச்சு -ன்னு ரண்டு தடவ சொன்னீங்க?
@#@
அடியே கூறுகெட்டவளே எம் பேரன் மன்னிச்சுத் தாண்டி கூப்புட்டுட்டு இருக்கறன்.
#@#
பாட்டிம்மா உங்க பேரம் பேரு அழகான இந்திப் பேரு. மணீஷ்ஸ்ரீ மணீஷ் -ன்னா மனதின் கடவுள்னு அர்த்தம். மணீஷ் திவாரின்னு ஒரு அரசியல் தலைவரும் இருக்காரு.
@#@
என்னடி மன்னிச்சு அப்பறம் திவ்வாரி.
#@#
பாட்டிம்மா திவாரிங்கறது அவரோட சாதிப் பேரா இருக்கும். இல்லன்னா குடும்பப் பேரா இருக்கும். தமிழ் நாட்டிலும் புதுச்சேரிலயுந்தான் சாதிப் பேர வச்சுக்காம இருந்தாங்க. இப்ப சாதி அமைப்புகளும் சாதிக் கட்சிகளும் வந்ததுக்கப்பறம்
சில படிச்சவங்களும் சாதிப் பேருங்கள வச்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க. படிச்சும் பதராப் போறவங்களா என்ன செய்யறது பாட்டிம்மா?
#@#
செந்தாமரை தமிழருங்கள்ல பெரும்பாலான படிச்சவங்களும் சினிமா மோகத்தில வர்ற இந்திவெறி அவுங்களக் கண்ட பேருங்களப் பிள்ளைங்கள வைக்க தூண்டிவிடும் போல இருக்கு. அடி போடி செந்தாமரை. தமிழ்ப் பேர வைக்கறது தாய்ப் பாலுக்குச் சமம். இந்திப் பேர பிள்ளைங்களுக்கு வைக்கறது பவுடர் பால தண்ணில கலந்து குடுக்கற மாதிரி. ம்..ம் நடக்கறபடி நடக்கட்டும். என்னைக்கா இருந்தாலும் தமிழருங்க ஒணந்து திருந்துவாங்கடி.
#########%
பிள்ளைகளுக்கு நல்ல தமிழ் பேர்களைச் சூட்டுவோம். தலை நிமிர்ந்து நிற்போம்.

எழுதியவர் : மலர் (9-Jul-16, 12:48 am)
பார்வை : 288

மேலே