தேசாக் கண்ணு

தேசாக் கண்ணு பால் குடிச்சுட்டுப் போயி வெளையாடுறா செல்லம்.

@##@
யாரா பாட்டிம்மா தேசாக்கண்ணுன்னு
கூப்பிடறீங்க?

@##
அடியே குத்தல்பேச்சு குமுதா
எம் பேரன் தேசாவத்தாண்டி கூப்படறேன்.
@@@
பாட்டி உங்க பேரம் பேரு தேஜா. தேசான்னா ஒளிமிக்க கதிரொளின்னு அர்த்தம் பாட்டி.
@#%@
ஏண்டி குமுதா நம்ம தாய் மொழிலே பேரு வைக்கறதுக்கு ஏண்டி படிச்ச தமிழர்களே வெக்கப்படறாங்க? ஏண்டி குமுதா நேத்து பேஞ்ச மழையிலே இன்னிக்கு மொளச் காளன் அந்த இந்தி மொழி.தமிழ்ல 2000வருசத்துக்கு முந்தியே தொல்காப்பியம் எழுதப்பட்டதுன்னு என் மவன் சொன்னான். ஆயிரம் வருசத்துக்கு முன்னால் உருவான அந்தக் கலப்பட மொழி தமிழங்களுக்கு பெருசாப் போச்சா.
இந்திக்காரன் எவனாவது தமிழ்ப் பேரத் தன்னோட குழந்தைக்கு தன்னோட செல்லக் குழந்தைக்கு வச்சிருகானா? நமக்குத் தன்மானமும் கெடையாது தமிழின் சிறப்பை அறியாமல்இந்திப் பேர வச்சு நம்ம கொழந்தைகளயும் நம்ம செம்மொழியையும் கேவலப்படுத்தறாங்கடி.
##%
போங்க பாட்டி . இந்திப் பேர வைக்கறரதாத்தான் மெத்தப் படித்த தமிழர்களே விரும்பறாங்க பாட்டி.
@%#@
எல்லோரும் பட்டாசு வெடிக்காங்கறதுக்காக நாமளும் காசைக் கரியாக்கறதோட மத்தவங்களுக்கு எடஞ்சல் பண்ணறவங்க தமிழர்கள் இல்லடி குமுதா.
@####
சிரிக்க அல்ல சிந்திக்க மொழிப் பற்றை வளர்க்க. பிறமொழிச் சொற்களின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (16-Jul-16, 1:21 am)
பார்வை : 148

மேலே