தேவலோகத்து விருந்தாளிகள்

இந்திர உலகத்தில்
எரியும் ..
மந்திர விளக்குகள் !.

சந்திரனோடு
நாளும்..
சந்தோஷமாய் கூடி பழகிடும்
சக நண்பர்கள்.

இவை கண்சிமிட்டி காதலாகி
கசிந்துருகியிருப்பது..
பூமிப் பெண்ணின்
புகழ் பெற்ற
பேரழகினைக் கண்டு தான்!..

இரவின் கானகத்திற்குள்..
இரை தேடி அலைகிறது .
இந்தப் புள்ளிமான் கூட்டம் ...

சூரியச் சிங்கம்
தன் பிடரி சிலிர்ப்பி
வந்து விட்டால்..
இவை கண்ணிமைக்கும்
நேரத்தில் ஓடி
கண்களிலிருந்து
அகன்று போகின்றன!.

இவை ஓளி ஆண்டுகள்
பல ஊடுருவி வந்த
உளவாளிகளா.?.

வானம் எனும்
பூமியின்
திண்ணையில்
தினம் வந்து நின்று ..
நலம் விசாரித்துப் போகும்
தேவலோகத்து
விருந்தாளிகளா..?

இரவில்
வேலைக்குச் சென்று
பகலில் ஒய்வெடுக்கும்
உழைப்பாளிகளா..?.

இரவு
எனும் இனிய கவிதையினை
தினம் எழுதிப் போகும்
கவி ஞானிகளா..?

எழுதியவர் : பரதகவி (16-Jul-16, 2:25 pm)
பார்வை : 142

மேலே