கரித்திக்கு கரித்திக்கு

யார பாட்டிம்மா கரித்திக்கு, கரித்திக்கு'னு கொஞ்சிட்டு இருக்கறீங்க?
#%@
வாடி புள்ள வள்ளி. எம் மவனுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடி பொறந்த எம் பேரனத்தாங் கொஞ்சிட்டு இருக்கறென்.
####
அதென்ன கரித்திக்கு'னு பேரு வச்சிருக்காங்க?
@%@#

எனக்கு என்னடி ஆத்தா தெரியும். எம் மவனும் மருவளும் படிச்சவங்களா இருந்தாலும் தீவிர சினிமா வெறி பிடிச்சவங்க. தமிழ்ப் பேர பிள்ளைங்களுக்கு வச்சா கேவலம்னு நெனைக்கறவங்க. இந்தக் குட்டிச் செல்லத்துக்கு கரிதிக்கு-னு பேரு வச்சிருக்காங்க. அதுக்கு என்ன அர்த்தம்னு அவுங்களுக்கும் தெரியாதாம்.
@##@@
கரிதிக்கு...... இப்பத்தாம் பாட்டி எனக்கு ஞாபகத்துக்கு வருது. குஜராத்லே ஒரு 22 வயசு இளைஞர் பிரபலமா இருக்காரு. அவரப் பத்தி நாளிதழ்கள்ல அடிக்கடி செய்தி எல்லாம் வருது. அவுரு பேரு ஹர்திக் பட்டேல். அந்த 'ஹர்திக்'ங்கற பேரத்தான் உங்க குட்டிப் பேரனுக்கு வச்சிருப்பாங்க.
@##@
அதென்னமோ எனக்கென்னடி தெரியும் வள்ளி. அந்தப் பேருக்கு என்னடி அர்த்தம்?
@##$
பாட்டி அந்தப் பேர வச்ச உங்க மகனுக்கும் மருமகளுக்குமே தெரியாதபோது எனக்கு மட்டும் எப்பிடி பாட்டி தெரியும்?
@##
ஆமாண்டி வள்ளி, நீ சொல்லறதும் சரி தான்.
@##%##########################
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (17-Jul-16, 12:46 pm)
பார்வை : 105

மேலே