குண்டே, குண்டே சீக்கரம் வாடா-

யாரப் பாட்டிம்மா குண்டே, குண்டே-ன்னு கூப்படறீங்க?
##@
ஏண்டி அல்லி எம் பேரனத்தாங் கூப்படறென்.
@#@
என்ன பாட்டிம்மா உங்க மகனுக்கும் மருமகளுக்கும் எதாவது பைத்தியம் பிடிச்சிட்டு இருக்குதா? பெத்த பிள்ளைக்கு குண்டே-ன்னு பேரு வச்சிருக்காங்க?
@%@
அத ஏண்டியம்மா கேக்கற? எம் மவனும் மருமவளும் கல்யாணத்துக்கு அப்பறம் செர்மனிங்கற நாட்டில அஞ்சு வருசம் வேலை பாத்தாங்க. அந்த நாட்ல பேசற மொழியையும் நல்லாக் காத்துட்டாங்க. அந்த மொழி ரொம்ப அழகான மொழியாம். எம் பேரன் அவுங்க அங்க போன ஒரு வருசத்திலே பொறந்துட்டான். அவுங்க அங்கயெ நெரந்தரமா தங்கப் போறாங்களாம். எம் பேரனுக்கும் செர்மனி பேரையே வச்சிட்டாங்க. அந்தப் பேருக்கு வாடிக்கையாளர்-ன்னு அர்த்தமாம்.
@%@
மாமாவும் அத்தையும் செஞ்சது கொஞ்சங்கூட நல்லால்ல. என்ன இருந்தாலும் தாய் மொழி மாதிரி வருமா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kunde=patron/customer/client.

எழுதியவர் : மலர் (20-Jul-16, 11:53 pm)
பார்வை : 189

மேலே