உலகே பூதம்•••

நெ ஒ :- ஏங்க பூதமுன்னு ஒன்னு இருக்கா அப்படி அதை பாத்தவங்க யாரு அவுங்கள காட்ட முடியுமா••!

நெ இ:- இது என்னாங்க பைத்தியக்கார தனமா இருக்கு இந்த உலகத்தில இருக்கிற அத்தனை ஜீவராசிகளுக்கும் பூதம் இருக்கின்னு தெரியுமே••!

நெ ஒ :- நீ சொல்ற ஜீவராசிகள்லநானும் ஒருத்தன்தானே அப்போ ஏன் என் கண்ணுக்கு தெரியமாட்டேங்குது•••!

நெ இ :- நீங்க பாத்து இருக்கீங்க•••!

நெ ஒ :- உங்கொப்புரானே சத்தியமா நான் பாக்கவே இல்லப்பா•••!

நெ இ :- இப்போகாட்டுறேன் பாருங்க•••!

நெ ஒ :- எங்கே காட்டு காட்டு•••!

நெ இ :- சரி அந்தம்மா தலையில தூக்கிட்டு வராங்களே அது என்ன•••!

நெ ஒ :- தண்ணி கொடம்••!

நெ இ :- அதுக்கு உள்ளே இருக்கு ஒரு பூதம்•••!

பெண் :- என்னது••• என் தண்ணி கொடத்தில பூதமா••• ( பெண் குடத்தை கீழே போட்டு விட்டு அலறியடித்து ஓட்டம்)

நெ ஒ :- எங்கே நான் பாக்கவே இல்லையே••!

நெ இ :- சரி விடு அதை பூமி இழுத்துக்கிச்சி இப்போ கவனமா பாரு அதோ ஆப்பக்கடை பாட்டி அது எதுல ஆப்பம் சுடுது•••!

நெ ஒ :- அந்த அடுப்புல••!

நெ இ ;- அந்த அடுப்புல பூதம் இருக்கு•••!

பாட்டி :- என்னோட அடுப்புக்குள்ள பூதமா••• ( பாட்டி விழுந்தடித்து ஓட்டம்)

நெ இ :- அவுங்க கண்ணுக்கு தெரியும் போது அது ஏங்கண்ணுல ஏன் தெரிய மாட்டேங்குது•••!

நெ ஒ :- நீங்க மீறின பிசாசுன்னு உங்கள பாத்து அது பயப்பட்டு மறைஞ்சிக்குதுன்னு நெனைக்கிறேன் சரி வாங்க அதோ பெரியவர் ஒருத்தர் உக்காந்திருக்காரே அவரு எதன் மேல உக்காந்திருக்காரு•••!

நெ இ :- என்னாப்பா நெலத்து மேல உக்காந்திருக்காரு•••!

நெ ஒ :- அது ஒரு பூதம்•••!

பெரியவர்:- ஐயோ பூதமா••! (விழுந்து எழுந்து ஓட்டம்)

நெ இ :- என்னாப்பா இது அதிசயமா இருக்கு அவுங்க கண்ணுக்கு தெரிஞ்சி எல்லாரும் ஓட்டம் பிடிக்கிறாங்க ஆனா என் கண்ணுக்கு இதுவரைக்கும் தெரியவே இல்ல•••!

நெ ஒ :- சரி சரி எதுவரைக்கும் ஏமாத்தும் அடுத்தத பார்ப்போம் வாங்க அப்படியே மேல பாருங்க என்ன தெரியிது•••!

நெ இ:- ஆகாயம்•••!

நெ ஒ :- அது ஒரு பூதம்•••!

நெ இ :- நீ பூதமுன்னு கத்தினதும் மரத்தில உக்காந்திருந்த பறவையெல்லாம் பறந்துடிச்சி ஓடுது ஆனா பூதம் மட்டும் தெரியலியேப்பா•••!

நெ ஒ :- கடைசியா பாக்கப்போவதை பாத்து விடுவோம் சரி உங்க மூக்குக்குள்ள போயிக்கிட்டும் வந்துக்கிட்டும் இருக்கே அது என்னதுங்க•••!

நெ இ :- அதுவா மூச்சி•••!

நெ ஒ :- அது எங்கே இருந்து வருதுங்க•••!

நெ இ :- காத்துல இருந்து வருது•••!

நெ ஒ :- அந்த காத்தும் ஒரு பூதங்க•••!

நெ இ :- காத்தா•••• பூதமா••• (எனஅலற மூச்சி பேச்சி இல்லை விழுந்துட்டார்)

நெ ஒ :- இந்த மாதிரி ஆளுங்க நிறை பேர் இன்னும் இருக்கத்தான் செயிராங்க அவரு கேட்ட பூதம் வேறு நான் அவருக்கு காட்டின பூதம் வேறு இப்படி வித்தியாசமானோர் இல்லாமல் இல்லை

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (21-Jul-16, 7:08 pm)
பார்வை : 74

மேலே