அண்ணன் என்னடா தம்பி என்னடா

தன் கணவனை பார்த்து)
"என்ன•••? அண்ணன் மகன் மேல பாசம் நெறைஞ்சி வழிஞ்சி கட்டுக்கு அடங்காம ஓடுற மாதிரி தோணுது"
(தம்பியின் மனைவி)

"பாசமாவது மண்ணாங் கட்டியாவது" ( தம்பி )

" வேற என்ன தா••••ம்•••புள்ளைக்கே•••• பால் வாங்கி கொடுக்க கையில காலணாவுக்கு வக்கு இல்லாம தவியா தவிச்சிக்கிட்டு இருக்கேன் நீ என்னடான்னா••• பிலிம் வாங்கியாந்து கேமராவில போட்டு அண்ணன் மகனை வளைச்சி வளைச்சி படம் எடுக்க பணம் எங்கே யிருந்து வந்தது யார் உங்க அண்ணன் கொடுத்து விட்டாரா" (தம்பியின் மனைவி )

"அட நீ ஒன்னு ஏங்கிட்ட ஏது பணம் பிலிம் வாங்க அண்ணனும் கொடுப் பாருன்னு நெனைச்சேன் அவரு வாயைகூட தெறக்கவே இல்ல பிலிம பத்தி" (தம்பி )

"ஏய் பொய் இங்க வா"( தம்பியின் மனைவி)

"கேமராவை திறந்து காட்டி இந்தா பாரு பிலிம் இருக்கா இதுக்குள்ள". (தம்பி )

"பின்ன ஏன் இந்தநடிப்பு பித்தலாட்டமெல்லாம்" (தம்பியின் மனைவி)

"போன வழிக்கு லீவு முடிஞ்சி போவும் போது ஆயிரம் ரூபாய கொடுத்து புள்ளைங்களுக்கு ஏதாவது வாங்கி கொடுங்கன்னு கொடுக்கலியா" (தம்பி)

"ஆமாம் இல்லன்னா சொல்லச் சொல்லுறே கொடுத் தாருதான்" (தம்பியின் மனைவி)

"இந்த தடவ கணிசமா ஏதாவது சந்தோஷ ப்பட்டு கொடுக்க மாட்டா ரான்னு தான்" (தம்பி)

"சரிதான் படம் எடுத்தியே போவும் போது கேட்டாங் கன்னா" ( தம்பியின் மனைவி)

"கழுவ கொடுத் திருக்கேன் நீங்க போங்க நான் கொரி யர்ல அனுப்பி வக்கிறேன்னு சொல்லி டலாம்" (தம்பி)

"அதுக்கப்புரமும் கேட்டா" (தம்பியின் மனைவி)

"சரியா வரலன்னு சொல்லிட வேண்டியது தான்" (தம்பி)

"சும்மா சொல்லக் கூடாது பயங்கரமான மூளய்யா உனக்கு ம்•••ம்•••நடத்து நடத்து" (தம்பியின் மனைவி)
•••••
அண்ணன் மனைவி "என்னங்க••••உங்க தம்பிக்கு•••••ஏதாவது••••கொடுக்கனுமா" (அண்ணன் மனைவி )

"ஒன்னும் வேணாம்" (அண்ணன் )

"ஏங்க வழிக்கு வழி நாம ஏதாவது கொடுத் துக்கிட்டு தானே இருக் கோம் இந்த தடவ ஏதாவது கொடுப் பாங்கன்னு எதிர் பாக்க மாட்டாங்களா" ( அண்ணன் மனைவி)

"வேணாமுன்னா விடேன்" (அண்ணன் )

"அதான் ஏன்னு கேக்கிறேன்" ( அண்ணன் மனைவி)

"அத சொன்னா நீ வருத்தப்படுவே" ( அண்ணன் )

"அப்படியென்ன நடந்துடுச்சி" (அண்ணன் மனைவி)

"நம்ம பையனை படம் எடுத்தானில்ல" ( அண்ணன்)

"ஆமாம் போட்டோவ வாங்கிட்டு வரவா" (அண்ணன் மனைவி)

"எடுத்து இருந்தா தானே நீ வாங்கிக் கிட்டு வரமுடியும்" (அண்ணன் )

"இல்லங்க வளைச்சி வளைச்சி படம் எடுத்தாரே••••••நானும் பாத்தேங்க" ( அண்ணன் மனைவி)

"அந்த கேமராவிலே பிலிமே போடாடாத போது படம் மட்டும் எப்படி எடுக்க முடியும்" ( அண்ணன் )

"அப்படின்னா" ( அண்ணன் மனைவி)

" நீ நம்பல இல்ல•••இங்க வா•••• கேமராவை தெறந்து காட்டி இதுக்குள்ள பிலிம் இருக்கா" ( அண்ணன் )

"ஏன் இப்படி" ( அண்ணன் மனைவி)

"தம்பி படம் எடுக்கிற வனாச்சே நம்ம புள்ளய ஒரு படம் எடுத்தானான்னு நாம வருத்தப்படக் கூடாதில்ல அதுக்காக நம்ம காதுல பூ சுத்திட்டோம் நாமதான் பெரிய புத்திச்சாலிங்கிற மெதப்பில இருக்காரு அவரு" ( அண்ணன் )

"பிலிம் வாங்க காசு உங்க கிட்ட கேக்க தயங்கி யிருந்தாலும் ஏங்கிட்ட கேட்டிருந்திருந்தா நான் கொடுத் திருக்கமாட்டேனா இப்படியும் மனுஷங்களா அதுவும் ஒரே ரத்தம் கூடப் பொறந்த அண்ணனுக்கே இந்த கதியா" (அண்ணன் மனைவி)

"சரி சரி இந்த விஷயம் நம்ம இரண்டு பேருக்
குள்ளேயே இருந்துட்டு போவட்டும் நமக்கு ஒன்னும் தெரியாத மாதிரியே இருந்துக்கனும்" (அண்ணன் )

"சரிங்க" ( அண்ணன் மனைவி )
••••
"போச்சி எல்லாம் போச்சி" (தம்பியின் மனைவி)

"என்னப்போச்சி" ( தம்பி )

"உன்னோட தில்லு முல்லு எல்லாம் உங்க அண்ண னுக்கு தெரிஞ்சிப் போச்சி" (தம்பியின் மனைவி)

"எப்படி"? ( தம்பி )

"அது எப்படியோ எனக்குத் தெரியாது உங்க அண்ண னும் அண்ணியும் பேசிக் கிட்டத நானே எங்காதால கேட்டேன் உங்க அண்ணன் யாருக்கும் ஒன்னும் தெரி யாத மாதிரி நடந்துக் கோன்னு உங்க அண்ணிக் கிட்ட சொல்லி வச்சிருக் காரு" (தம்பியின் மனைவி)

"நான் தான் நெறைய படிச்சவன் புத்திச் சாலி யின்னு நெனைச் சிக்கிட்டது எவ்வளவு பெரிய கீழ் தரமான செயல்ங்கிறத உணர வச்சிட்டான் கடவுள்"
(தனக்கு தானே தாக்கியது மனதில் தம்பிக்கு )

"அதுமட்டுமல்லாமல் உங்க தம்பிக்கு ஏதாவது வழிக்கு வழி கொடுப்பீங்களே இந்த தடவ ஏதாவது கொடுக் கட்டுமான்னு கேட்டாங்க அதுக்கு உங்க அண்ணன் ஒன்னும் வேணாமுன்னு சொல்லிட்டாரு" (தம்பியின் மனைவி)

" ச்சா••••ஆமாம் இந்த விஷயத்த ஊங்கிட்ட மட்டும்தானே••••••அது அவருக்கெப்படி•••" (தம்பி)

"அதான் எப்படியின்னு எனக்கும் தெரியல தானா வர இருந்த சீதேவிய காலால எந்தின மாதிரி எந்திட்ட பொய் சொன்ன வாயிக்கு போசனம் கிடைக்காதுன்னு அனுபவப் படாமலா சொல்லி வச்சிருக்காங்க" ( தம்பியின் மனைவி)

" தப்பு பண்ணிட்டோமே"
( தம்பி )

" டோமே இல்ல டேனேன்னு சோல்லு " (தம்பியின் மனைவி)

". சரி சரி இப்போ எப்படி அவரு முகத்தில முழிக்கிறது" (தம்பி )

" இப்போ நெனைச்சி என்ன பிரயோசனம் இந்த தப்ப செய்யிறதுக்கு முன்னா டியே யோசிச்சி செய்ய லாமா வேணாமான்னு முடிவு பண்ணி இருக்கனும்" (தம்பியின் மனைவி)

" நம்ம தலையெழுத்து இப்படித்தான்னா நாம என்ன பண்ணமுடியும்"
(தம்பி)

" இது தலையெழுத்துமில்ல ஒரு மண்ணுமில்ல தான் எங்கிற கர்வம் இப்போ என்ன பண்றதா இருக்கீங்க" (தம்பியின் மனைவி)

" அவர் முகத்தில முழிக்க எனக்கு தைரியம் இல்ல....என்னைய கேட்டா...வெளியில போயி இருக்கிறதா ஏதாவது சாக்கு போக்கு சொல்லிடு" (தம்பியின் மனைவி )
•••••
" என்னம்மா எங்கே உன் வீட்டுக்காரன் "(மாமா)

" மாமா எங்கள மன்னிச்சிடுங்க " (தம்பியின் மனைவி)

" என்ன மன்னிக்கவா அதுவும் நானா ஆமாம் என்ன மன்னிக்கச்சொல்ற அளவுக்கு நீங்க என்ன தப்பு பண்ணீங்க என்னது என்ன நடக்குது இங்க எனக் கொன்னும் புரியல " (தம்பியின் அண்ணன் )

" மாமா அவரு உங்க கொழந்தைய படம் புடிக்கிற மாதிரி பிலிம் போடாத கேமராவால வெறும் பிளாஷ் மட்டும் அடிச்சது உங்களுக்கு தெரிஞ்சிப் போச்சின்னு அவருக்கு தெரிஞ்சிப்போச்சி அதனால் உங்க மொகத்தில எப்படி முழிக்கிறதுன்னு தலைமறைவாயிட்டாரு" (தம்பியின் மனைவி)

" ஓ••• அதுவா•••••இல்ல••• இப்படி செய்ய வேண்டிய அவசியம் என்ன அவன் எதையோ மனசில வச்சிக்கிட்டு இப்படி செஞ்சிருப்பான் இதை ஓப்பனா ஏங்கிட்ட சொல்லியிருக்கலாம் அதைவிட்டு••••••சரி அத விடும்மா அவன் பண்ணது தப்பு இல்ல அது எனக்கு தெரிந்து விட்டது தான் தப்புன்னு நெனைக்கிறேன் டேய் தம்பி இங்கே வாப்பா"
( மாமா )

" என்ன பெரியப்பா " ( தம்பி மகன்)

" இந்தா இத வச்சி நோட்டு புக்கு பேனா பென்சில் எது இல்லையோ அது வாங்கி க்கோ•••••எங்கே இன்னொ ருத்தன கானோம் இதை அவங்கிட்ட கொடுத்து விடு•••••சரிம்மா நாங்க வரோம்••••சண்டை சாடி போட்டுக்காம•••••சந்தோஷமா இருங்க நாங்க வரோம் உன்வீட்டுக்காரங்கிட்டேயும் சொல்லிடு" (அண்ணன்)

" அக்கா...ஒன்னும் நெனைச்சிக்காதீங்க புத்திக்கெட்டதனமா அப்படி நடந்துக்கிட்டாரு" (தம்பியின் மனைவி)

" உண்மைக்கு ஒலியத் தெரியாது தங்கச்சி நாங்க வரோம்" (தம்பியின் மனைவி)

"சரிக்கா•••••" (ஏதாவது கெடைச்சி••• இருந்த சில்ர கடனை அடைச் சிடலா முன்னு நெனைச்சேன் பாவி மனுஷன் இப்படி பண்ணி ட்டாரே) (தம்பியின் மனைவி)
•••• end.

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (23-Jul-16, 6:50 pm)
பார்வை : 576

மேலே