நடிக்க அவசியமில்லை

உன்னோடு தெருவில் கிடக்கிறேன்
உன்னோடு சொர்க்கத்தில்
கிடக்கிறேன்

என்பதல்ல என் மகிழ்ச்சி
உன்னோடு கிடக்கிறேன்
உன்னோடு இருக்கிறேன்
என்பதே
என் மகிழ்ச்சி

உன்னோடு முட்கள்
மெத்தையிலும்
ரத்தம் ஒழுக ஒழுக
சிரித்துக் கொண்டே வாழ்வேன்

உன்னோடு வாழா
ஒரு நானோ நொடியும்
கடிகார முட்களும்
இதயத்தை குத்திட்டு
போகிறது

அதற்கும்
தெரிந்திருக்கிறது
உனை பிரிந்த நான்
பிணம் என்று

உனை பிரிந்து ஒரு நொடி கூட
வாழக்கூடாது என்று
என்போல்
என் தோழன் காலனுக்கும்
தெரிந்திருக்கிறது
ஆதாலாலே
உடனே நீ அருகில் இருக்கும்பொழுதே
வலியை கொடுத்து
வாய் முழுக்க உன் நாமத்தை அழைத்து
எனக்கே சொந்தமான
உன் மடியிலேயே
உன் கரம் பிடித்தே இறக்க செய்துவிட்டான்
இதுமாத்திரம் இல்லாமல்
உன் கையால்
எனக்கு காரியம்
செய்கிறாய்
நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள்

அடி போடி பைத்தியக்காரி
உனை ஒரு நிமிடம்
அழவிடலாம் என்று
சொன்ன பொய்யை நம்பி
உயிரையே விட்டுவிட்டாயேயடி

காலத்திற்கும் எனை
நிரந்தரமாக
அழவைத்து விட்டு
போய்விட்டாயேயடி
நான் தான்
பைத்தியம்
விரலை விட்டு விரல் நகரும் கணமே
வலிக்கிறது மாமா
என்று
கோர்த்துக்கொள்பவள் நீ

உன்னிடம்
விட்டு போகிறேன்
என்று சொன்னது
மிகப் பெரிய தவறு தான்
ஆதலால் தான்
எனை விட்டு நீங்கள்
போவதற்கு
முன்
உங்கள் கண்ணெதிரிலேயே
உங்கள் மடியிலேயே
உலகத்தை விட்டே போகிறேன்
என்று சென்றாயோடி

அவள் என்னிடம் சொன்னது
இவை யாவும்

திருமணத்திற்கு முன்வரை
சாலையில் இப்படி
தோள் சாய்ந்து
கட்டிக்கொண்டு போகிறார்களே
என்று எண்ணியதுண்டு
எல்லோரும் வந்து போகும்
பொது இடங்களில்
மடிசாய்ந்து கிடக்கிறார்களே
என்று நினைத்ததுண்டு
தெருவில் இப்படி கைகோர்த்து முத்தம் தருகிறார்களே
என்று முகம் சுருங்கியதுண்டு
அறியாத வயதில்
திரைப்படம் பார்க்கையில்
கட்டிலில்
உடல்கள் தழுவுவது தவறென்றும்
நினைத்துக் கொண்டதுண்டு

இன்றோ
அன்பே
அது யாவும்
பொய்யாய் போனது
உலகமே பசுமையாய் தெரிகிறது
உன்னை தவிர வேறு
யாரையும் தெரியவில்லை

வீதியில் இறங்கி
சண்டை போட
அஞ்சும் நான்
இன்று
அதே வீதியில்
உன் மடியிலேயே
கண் மூடுவேன்
எத்தனை பேர் பார்த்தாலும்
எனக்கு கவலை இல்லை
நான் அணைத்துக் கொண்டிருப்பது என் கணவன்

காலாச்சாரத்தையும்
பண்பாடையும்
நுனியளவும்
பிசகாதவள்
நான்
ஆதலால் தான்
கட்டின கணவனை
அணைத்துக் கொள்கிறேன்

யார் வந்து தவறாக கேட்டு விடுவார்கள்
நான் என்ன வேண்டுமென்றே
நகர மனமில்லாமல்
தெருவிலேயே
படுத்துவிட்டேனா
இல்லை போதையில்
படுத்தேனா
இல்லவே இல்லை
உயிர் நிற்க போகிறது
என்று நான் உணர்கிறேன்
போகும் உயிரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது
அந்த தருணத்தில்
அது எந்த இடமாக இருந்தால் எனக்கென்ன
என் உயிரை அணைத்துக் கொள்வது தானே முறை
இதில் என்ன தவறு இருக்கிறது
இது தானே தமிழ் காலாச்சாரமும்
பண்பாடும்

போகும் உயிரை தடுக்க முடியாது
ஆனால் உடனே சென்று
மீட்டுவரமுடியும்
சாவித்திரி சத்தியவானாக

எவ்வளவு
இன்னல்களிலும்
புரிந்து வைத்திருப்போம்
ஒருவரை ஒருவர்
நளன் தமயந்தியாக

நாங்கள் நாங்களாகவே
வாழ்வோம்
எந்த சூழலிலும்
எந்த இடத்திலும்
நடிக்க அவசியமில்லை

நாங்கள் நாங்களே
வாழ்க்கை வாழவே
மனம் மனமே
அன்பு அன்பே
வெளிப்படை வெளிப்படையே
எந்த சூழலிலும்

எளிமை ஆடம்பரம்
துன்பம் இன்பம்
தோல்வி வெற்றி
கவலை மகிழ்ச்சி
வறுமை பெருமை
பசி ஆசி
வேறு வேறு இல்லை
நமக்கு
இறைவன் எல்லா நிலைகளிலும்
எங்களை நன்றாய்
வைத்துள்ளார்.....
ஒன்றாய் வைத்து.....
உயிரை ஒன்றாய்
துடிக்க விட்டு.......
தேகம் சுட்டெரிப்பதும்
பனிமழையில் நனைவது தான்
உயிர்கள் இணைந்திருக்கும் பொழுது
பூ மழையும்
கண்ணீர் தான்
உயிரை உடலோ
உடலை உயிரை
சிறு பொழுது பிரிந்தாலும்


பிரியாது இந்த பந்தம்
நூறு சென்மம் வாழும் நித்தம்

கவலையை தாங்கும் மனம் தா
மகிழ்ச்சியில் மயங்கா திடம் தா

எப்பொழுதும்
எங்களை பிரிக்கா
உயிர் தா
எதையும் தரவில்லை என்றாலும்
இதைத் தா
அதுவே போதும்
அனைத்தும் கிடைத்துவிடும்

உயிரை எடுக்க வேண்டுமென்றால்
இரண்டையும்
எடுத்துக்கொள்
(எமனே
நீ ஒன்றை விடுத்து ஒன்றை எடுத்தால்
உனக்குத் தான் கால விரயம்
அதுமாத்திரம் இல்லாமல் நீ சோம்பேறி என்று அர்த்தம்
உன் பெயர் தர்மனும் இல்லை

உன் வேலையை எப்பொழுதோ
நானே செய்துவிட்டேன்
உனக்கே அது தெரியாது
என்னுயிரை நீ பறிக்கும் பொழுது
முதலில் இந்த உடல் தான் சரிந்தது
உன் சாட்டையில்

அதை உணராத நீயோ
அன்றில்களை பிரித்துவிட்டேன் என்று
அழுகிறாய்
அன்றில்களை
உன்னால் அல்ல
யாராலும் பிரிக்க முடியுமா

விரைந்து நரகம்
சென்று பார்
அங்கே அவர் மடியில் படுத்திருக்கிறேன்
தாமதிக்காதே
உடனே செல்
சொர்க்கம் செல்லவிருக்கிறோம்
பின் இறைவனின் திருவடியில்
இணைந்து வாழப்போகிறோம்
எங்களை அவர் இதயகமலத்தில்
சூடிக்கொள்ள போகிறார் )
வாழவேண்டுமென்றால்
இரண்டையும்
இணைந்து வாழவிடு


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (24-Jul-16, 9:41 am)
பார்வை : 207

மேலே