காதலிக்குறீங்களா இதை படிங்க

நேத்து பள்ளி தோழனை பார்த்தேன். மச்சான் கல்யாணம் ஆயிடுச்சுனு சொன்னான். என்னடா சொல்லவே இல்லனு கேட்டேன். இல்ல சந்துரு, பொண்ணு வீட்டில சம்மதிக்கல அதான் ‪#‎கூப்பிட்டு‬ வந்துட்டேன்னு சொன்னான். அத ரொம்ப கெத்தா வேற சொல்றான்....பையன் வீட்டில இரண்டு நாளா திட்டுனாங்க, அப்புறம் சரினு விட்டுடாங்க.

இப்ப எனக்கு தோணுற ஒரே கேள்வி ,

அந்த பொண்ண பத்துமாசம் சுமந்து உயிர பணயம் வச்சு பெத்து,
நம்ம பொண்ணு, நம்ம வீட்டு மகாலஷ்மினு பார்த்து பார்த்து வளர்த்து கஷ்டபட்டு காலேஷ் வர படிக்க வச்சதுக்கு . "வளர்ப்பு சரியில்ல, அதான் ஓடிப்போயிட்டா"னு கேட்கமுடியாத கேள்விகள் தான் அந்த பொண்ணோட அப்பா அம்மாக்கு தண்டனையா??

அந்த பையன் வீட்டில எந்த பிரச்சனையும் இல்ல, ஆனா பொண்ணு வீட்டில? இனி அவங்க தலை நிமிர்ந்து நடக்க முடியுமா?

ஒரு வேல அந்த பொண்ணுக்கு தங்கையோ , அக்காவோ இருந்தா, அவங்களுக்கு எப்படி கல்யாணம் பண்வாங்க? அந்த குடும்பத்துல ஒரு பொண்ணு ஓடி போயிட்டானு தெரிஞ்சா யார் அப்புறம் பொண்ணு எடுப்பாங்க?

ஓடிப்போறவங்ககிட்ட ஒரே கேள்வி தான்
1 ஏன் இப்படி சுயநலமா இருக்கீங்க?
உங்க ஆசைகளுக்காக ஒரு குடும்பத்தையே நாசமாக்குறீங்க..

பெத்தவங்க புரிஞ்சுக்கல , பெத்தவங்க காதல புரிஞ்சுக்கலனு நொண்டி சாக்கு சொல்லாதீங்க.

2 வருசமா பழகி காதலிச்ச காதலன் , வாழ்க்கை முழுசும் வச்சு காப்பாத்துவான்னு புரிஞ்சுக்குற நீங்க, 20, 25 வருசமா வளர்த்த பெத்தவங்க, காதலை ஏத்துப்பாங்களா மாட்டாங்களானு முதல்லே ஏன் புரிஞ்சுக்காம காதலிச்சீங்க?

பொண் குழந்தைனு கருவைவே கலைக்குற, கள்ளி பால் கொடுத்து கொல்லுற மனசுங்களுக்கு நடுவில, உங்கள வளர்த்து ஆளாக்குன பெத்தவங்களோட அருமை எப்போ புரியும் ?
ஒரு வேல,
பொண்ணு நமக்கு எதுக்குனு .. குப்பைத் தொட்டில போட்டிருந்தா
அப்பா அம்மாவோட பாசம் புரிஞ்சுருக்குமோ?
[பெண்ணை மட்டும் குறை சொல்ற மாதிரி பதிவு இருந்தால் மன்னிக்கவும், பையன் மீதுள்ள தவறை வேற பதிவில் பார்க்கலாம் ]

காதலிக்குற எல்லார் கிட்டையும் நான் கேக்குறது ஒரே கேள்வி தான்,
நாம நல்லா இருக்கணும்னு பார்த்து பார்த்து வளர்த்த பெத்தவங்கள அழ வச்சிட்டு நாம சந்தோஷமா வாழ்ந்திட முடியுமா???

முடிந்தவரை பெத்தவங்க சம்மதத்தோட காதல் கல்யாணம் பண்ணுங்க. அதான் எல்லார்க்கும் ‪#‎மகிழ்ச்சி‬

தவறாக எதும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (24-Jul-16, 11:39 pm)
பார்வை : 408

மேலே