வேண்டாம் சாடல்

வேண்டாம் சாடல்
@@@@@@@@@@@@@@@@@@@@

இளம் கவிஞர் பலருண்டு

நல்ல கவிதைகளை யாக்கி

நாம் வியக்கும் வண்ணம்

படைத்து நமக்களிக்க.

எதற்காகக் கவிதைவழி

தேவையற்ற சாடல்?

திறமை கவிதையாகி

வெளியான பின்னே

சுவைநருக்கு உரிமையுண்டு

கவிதை பற்றித் தம்கருத்தை

கண்ணியம் குறையாமல்

எடுத்துச் சொல்லி

ஊக்கம் தருவதற்கு!

அறுபத்திரண்டு வயதினன் நான்

அன்போடு கேட்கிறேன்

எழுத்துலக நண்பர்களே

நாமெல்லாம் ஒரு குடும்பம்

நமக்குள் தேவையில்லை

எந்தவிதப் பிணக்கும்.

தமிழரின் பண்பாடே

தமக்குள் சண்டையிட்டு

மாற்றாரைப் போற்றி

நம்மவரைத் தூற்றி

நமக்கு நாமே பகைவராகி

நிலைத்து இருப்பது தான்.

இப்பெருமை நமக்கு

இனியும் வேண்டாமே!

பாராண்ட தமிழ இனத்தை

பிறமொழி பேசுவோர்

துச்சமாய் எண்ணும் வண்ணம்

போனது யாராலே?

சாடல் இனிவேண்டாம்

கூடல் மட்டும் வேண்டுவோம்.

தமிழரென்று சொல்லுவோம்

தலைநிமிர்ந்து நிற்போம்.

@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழர் ஒற்றுமை


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


நாள் : 25-Jan-14,
சேர்த்தது : malar1991

இந்தப் படைப்பு கவிஞர் திரு அகன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் பின்னர் விலக்கப்பட்டது.

எழுதியவர் : மலர் (25-Jul-16, 2:44 pm)
Tanglish : ventaam saadal
பார்வை : 59

மேலே