மரத்தின் பாடம்

”கண் இருட்டிக்கொண்டது, மயக்கம் வருவதுபோல் இருந்த்து. எங்கே விழுந்துவிடுவோமோ” என பயந்து ஒரு மரத்தடியில் ஒதுங்கி படுத்து கொண்டான் வேலன்.
”அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்றே தெரியாதநிலையில் இருந்தபோதுதான்….அவன் காதில் ஏதோ பேச்சு குரல் கேட்டது. அரை மயக்கத்தில் அவனுக்கு எங்கேயோ கிணற்றில் இருந்து வரும் சப்தம்போல இருந்த்து.
அந்த குரல், ஐயோ பாவம், ஒனக்கு உதவி செய்கிறேன்” என்ற குரல் வந்து கொண்டே இருந்த்து. ஆனால் சுற்றிலும் ஆள்நடமாட்டம் இல்லை. கொஞ்சம் பயந்துதான் போனான். இருந்தாலும் சமாளித்து கொண்டு நிதானமாய் கவனித்தான்.
பேச்சுகுரல் மரத்திடமிருந்துதான் வந்த்து. ஆச்சர்யமாய் அதை உற்று பார்த்தான். ” உன்னுடைய புழைப்புக்கு என்னிடம் உள்ள பெரிய கிளையை வெட்டி எடுத்து கொள்” அதை விற்று பிழைத்து கொள். உனக்கு எதுவுமே வருவாய் கிடைக்கவில்லை என்றால் என்னிடம் வா என்றும் சொன்னது அந்த மரம்.
வீட்டிற்கு போனான்….. கோடாரியை எடுத்து வந்தான். மரத்தின் ஒரு பெரிய கிளையை வெட்டினான். விற்றான் போதிய வருவாய் கிடைத்த்து. கொஞ்ச நாள் கழித்து திரும்பவும் அதே மரத்திடம் போனான். மீண்டும்…அதே குரல்… மீண்டும் ஒரு கிளையை வெட்டினான் விற்றான். இப்படி ஏதும் வருவாய் கிடைக்காத போதெல்லாம் மரத்திடம் போவது, மரத்தின் கிளையை வெட்டுவது என்பது வாடிக்கையானவுடன். அவன் உடம்பில் சோம்பலும் தொற்றிக் கொண்டது.
உழைக்காமல் என்ன செய்யலாம் என்று யோசித்து…. மரத்தின் ஒவ்வொரு கிளையாய் வெட்டி …வெட்டி ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். ஓரே போடாக போட்டு விட்டால்… மொத்தமாக விற்று பணம் சம்பாதிக்கலாம் என்ற பேராசை தொற்றி கொள்ள… கோடரியை நன்றாக தீட்டிக் கொண்டு காட்டில் அந்த மரத்தை தேடி போனான்.
அங்கே அவனுக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. ஏனென்றால்…அந்த இடத்தில் மரம் இருந்த்ற்கான சிறிய அறிகுறி கூட இல்லாமல் இருந்த்து கண்டு பயந்தவாறே வீட்டிற்கு நடையை எட்டி போட்டான்

எழுதியவர் : கே. அசோகன் (25-Jul-16, 9:11 pm)
Tanglish : maratthin paadam
பார்வை : 290

மேலே