கீன்னா, கீன்னா

கீன்னா, கீன்னா!
@@@@
என்னங்க பாட்டிம்மா, கனா, காவன்னா, கீனா, கீயன்னான்னு சொல்லற மாதிரி கீன்னா, கீன்னா-ன்னு சத்தம் போட்டுட்டு

இருக்கறீங்க?
@@@@
நா என்னத்த சொல்லுவண்டி தங்கம். எம் பையன் நேத்துத்தா மூணு வருசத்துக்கப்பறம் கல்லுக்கத்தாவ்லெ இருந்து வந்தான்.

அவுனும் அவம் பொண்டாட்டியும் கடத்தெருவுக்குப் போயிருக்கறாங்க. எம் பேத்தி கீன்னா ரொம்பக் குறும்புத்தனம் பண்ணீட்டு

இருந்தா. அவள மெரட்டினென். அவ கோவிச்சிட்டு எங்கயோ வேகமா ஓடுனா. அவளத்தாண்டி கூப்படறேன்.
@@@
சரி பாட்டிம்மா நாந் தேடி அவளக் கூட்டி வரறேன். அவள கீன்னா-ன்னு கூப்படக்கூடாது. ஹீனா-ன்னுதான் அவ பேரச் சொல்லணும்

பாட்டிம்மா,
@@@
ஏண்டி தங்கம், அந்த இந்திப் பேரெலலாம் எம் வாயில நொழையுமா? என்னால அவ பேர கீன்னா-ன்னுதாம் சொல்லமுடியுண்டி தங்கம்.
@@@@@@@@@@@@@@@@@
அவள ஒரு வயசில பாத்தது. எனக்கும் அவளப் பாக்க ஆசையா இருக்குது பாட்டிம்மா.
@@@@
சரி நீ போயிட்டு வா. அதுக்கு முன்னாடி அவ பேருக்கு என்ன அர்த்தம்னு சொல்லிட்டுப் போடி. நானும் எம் பையன பல தடவ

கேட்டென், அவன் “அது இந்திப் பெருமா. அந்தப் பேரோட அர்த்தத்த தெரிஞ்சு என்னம்மா செய்யப்போறே”ன்னு சொல்லிட்டாண்டி

தங்க.ம்.
@@@@@
கவலய விடுங்க பாட்டிம்மா. நா அவ ஒரு வயசுல வந்தபோதே எங்க பக்கத்து வீட்ல இருக்கற இந்தி ஆசிரியர்கிட்ட “ஹீனா=ன்னா

என்ன அர்த்தம்?’ன்னு கேட்டேன். அவரு “ஹீனா-ன்னா மருதாணி”-ன்னு சொன்னாரு.
@@@
ஏண்டி தங்கம் கைவெரல்ல, கால்ல எல்லாம் வச்சிக்கறதுதாண்டி. உள்ளங்கால்ல வெச்சுக் கட்டிட்டு தூங்குனா ஒடம்பு

குளிர்ச்சியாகுண்டி. எல்லாப் பொம்பளங்களுக்கும் பிடிச்ச அந்த மருதாணியோட பேரையே வச்சா என்னடி கேவலம்?
@@@
பாட்டிம்மா இப்பெல்லாம் பெத்த பிள்ளைங்களுக்கு தமிழ்ப் பேர வச்சாக் கேவலம்னு பெரிய படிப்புப் படிச்ச தமிழர்களே

நெனைக்கறாங்க. நாம என்னடி செய்யறது பாட்டிம்மா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Heena = हिना = HENNA = மருதாணி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி: இண்டியாசைல்ட்நேம்ஸ்காம் & பார்வதிவிஸ்வேஸ்வரன்பிளாக்ஸ்பாட்.

எழுதியவர் : மலர் (28-Jul-16, 6:33 pm)
பார்வை : 224

மேலே