பொன் விழா காண்போம்

மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்
திரை மோகம்
நூற்றாண்டு விழாக் கண்டது!



இந்திப் பெயர் மோகமோ
பல நூறு ஆண்டுகளாய்
தமிழர் குருதியில் பின்னிப்
பிணைந்து விட்டதால்
பரம்பரை மோகமாய் மாறி
தமிழ்ப் பெயர்களே இல்லாநிலை!
அரை நூற்றாண்டு சென்றபின்
தமிழ் நாட்டின் பெயரே
மாறிப்போகலாம்
தமிழ்ப் பெயரொன்று
எங்கும் இருக்காது.

பொன் விழா காண்போம்
பொறுத்திருங்கள் தமிழர்களே!


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி : படம்: திகழ்மதி, முகநூல்

எழுதியவர் : மலர் (31-Jul-16, 5:05 pm)
Tanglish : pon vizhaa kanbom
பார்வை : 275

மேலே