நைச்சா நைசத்தா நைதிக்கு

வாம்மா தங்கம். நல்லா இருக்கறயா?
@@@
நல்லா இருக்கறென் பாட்டிம்மா. அண்ணாச்சி அமெரிக்காவ்லே இருந்து குடும்பத்தோட வர்றதாச் சொன்னீங்களே வந்துட்டாங்களா?
@@@
வந்துட்டாங்கடி தங்கம். அவுங்க வந்து ரண்டு நாள் ஆகுது.
@@
அவுங்க எங்க?
@@@
அவுங்கெல்லாம் கடத்தெருவுக்குப் போயிருக்காங்கடி தங்கம்.
@@@
நா அவுங்கள பாக்கத்தான் வந்தென் பாட்டிம்மா. சரி அவுங்களுக்கு மூணு கொழந்தைங்க இருக்கறதாச் சொன்னீங்க. அவுங்க பேரெல்லாம் சொல்லுங்க பாட்டிம்மா.
@@@
சரி சொல்லறண்டி தங்கம். மூத்த பொண்ணு பேரு நைச்சா, ரண்டாவது பொண்ணுப் பேரு நைசத்தா, மூணாவதா பையன். அவம் பேரு நைதிக்கு.
@@@
என்ன பாட்டிம்மா நீங்க சொல்லறங்க? எந்தப் பேரும் தமிழ்ப் பேரா இல்லையே. நீங்க தப்புத் தப்பா அந்தப் பேருங்கள உச்சரிக்கற மாதிரி தெரியுது. அதுக்கெல்லாம் என்ன அர்த்தமோ அதுவும் தெரில.
@@@
நமக்கென்னடி தங்கம்? எம் மவன், மருமவ ரண்டு பேரும் பெரிய படிப்பு படிச்சவங்க. அவுங்களுக்குப் பிடிச்ச பேருங்கள அவுங்க பிள்ளைங்களுக்கு வெச்சிருக்காங்க. எம் பையனுக்கு அழகர-ன்னு நல்ல தமிழ்ப் பேர வெச்சோம். அவுனுக்கு தமிழ்ப் பேருள்ள பொண்ணாத் தேடி உங்க பெரிப்பா கலியாணம் பண்ணி வச்சாரு.
@@@
ஓ… அண்ணி அருளரசி பேரச் சொல்லறீங்களா?
@@@
ஆமாண்டி. இப்ப அவுங்க ரண்டு பேரும் சேந்து எம் பேரப் பிள்ளைங்களுக்கு என்னென்னவோ பேர வச்சிருக்காங்கடி தங்கம்,.
@@@@
என்ன பாட்டிம்மா செய்யறது. இப்பெல்லாம் தமிழ வளக்க வேண்டிய தமிழ் ஆசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்களே தமிழ மதிக்காம வேற மொழிப் பேருங்களத்தான் அவுங்க பிள்ளைங்களுக்கு வெச்சுக்கறாங்க. எல்லாம் கலிகாலம் பாட்டிம்மா. தமிழப் பத்திப் பேசினாவே நம்மள எங்கூடப் படிச்சவங்க்ளே கேவலமாத்தாம் பாத்தாங்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Nais; ನೈಷಾ; નૈષા; நைஷா; নৈষা; నైషా; നൈഷാ = Special
சிறப்பு பண்பு, எதாகிலும் ஒன்றில் சிறப்பாக இருத்தல்

Naishadha ನೈಶಾಧಾ; নৈশাধা; నైశాధా; ਨੈਸ਼ਾਧਾ; நைஷாதா; നൈശാധാ; નૈશાધા = செய்யுள், கவிதைகள்

Naitik = Good in nature = இயற்கையிலேயே நல்ல பண்புள்ள.

@@@@@@@@@@@@@@
நன்றி: இண்டியசைல்ட்நேம்ஸ்காம் & யுனிவர்சல் டீலக்ஸ் அகராதி
படம்: தி இந்து –
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எம்மொழி செம்மொழி
சீரிளமை குன்றா
உலகின் முதன் மொழி

எழுதியவர் : மலர் (31-Jul-16, 8:08 pm)
பார்வை : 164

மேலே