நுட்ப நகரம் என்றால் என்ன அதாவது ஸ்மார்ட் சிட்டி smart city என்றால் என்ன

நுட்ப நகரம் என்றால் என்ன?
அதாவது ஸ்மார்ட் சிட்டி (smart city) என்றால் என்ன?
தமிழ்நாட்டில் எவையெல்லாம் நுட்ப நகரங்கள்?

சகல நவீன வசதிகளையும் பெற்றதாக, வாழத்தக்கதாக உள்ள நகரமே நுட்ப நகரம் ஆகும்.

மோடி அரசு இந்தியாவில் 100 நகரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை நுட்ப நகரங்களாக மாற்றும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டம் 98,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது. இது மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்
கீழ் வருகிறது. இப்போது இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் யார்?

வெங்கையா நாயுடு என்று யாம் சொன்னால், அது சரிதானா என்றும் நீங்கள் சொல்ல வேண்டியிருக்கும்.

1) நுட்ப நகரம் என்ற கோட்பாடு சரிதானா?

2) இது நகரம்-கிராமம் என்ற இடைவெளியை அதிகரிக்குமா, அதிகரிக்காதா?

3) இங்கு விலைவாசி, வாழ்க்கைச்செலவு (cost of living) ஆகியவை எப்படி இருக்கும்?

4) ஏழைகள், வீடற்றோர், பிளாட்பாரவாசிகள் ஆகியோர் இங்கு வாழ அனுமதிக்கப் படுவார்களா?

5) நுட்ப நகரமாக மாற்றப்பட்ட பின், இங்கு ஒரு கிரவுண்டு என்ன விலை போகும்?

6) ஒரு சிறிய வீட்டுக்கு வாடகை எவ்வளவு இருக்கும்?

7) நுட்ப நகரமான பின், ஏழை எளிய, கீழ் நடுத்தர மக்கள் இங்கு தொடர்ந்து வாழ முடியுமா? அல்லது ஊரை காலி செய்து விட்டு ஓட நேருமா? அல்லது வாழ்க்கை உள்ளபடியே நன்றாக இருக்குமா?

8) மொத்தத்தில் இதை ஆதரிக்கலாமா எதிர்க்கலாமா?
9) இந்தியாவுக்கு நுட்ப நகரம் தேவையா, தேவை இல்லையா?

இந்தக் கேள்விகளுக்கு நியூட்டன் அறிவியல் இப்போது பதிலளிக்கப் போவதில்லை. அடையாள அரசியல் கபோதிகள் முதலில் பதில் சொல்லட்டும்.

இப்போது இன்னொரு கேள்வி!

நுட்ப நகரங்கள் உருவாக்கத்திற்கு தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நகரங்கள் எத்தனை? எவை எவை?

24 மணி நேரமும் அடையாள அரசியல் பேசிக் கொண்டு சமகால சமூகத்தின் பிரச்சினைகள் என்னவென்று கூட தெரியாத அடையாள அரசியல் கபோதிகள் இதற்குப்பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள். ஆனால் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்.

எனவே சமூக அக்கறை உள்ள வாசகர்கள் விடையளிக்குமாறு வேண்டுகிறோம்.

இவண்
நியூட்டன் அறிவியல் மன்றம்

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (1-Aug-16, 1:00 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 661

மேலே