நம் இன்றைய தாய்க்குலங்கள்

நம் இன்றைய தாய்க்குலங்கள்

பட்டிலே உடையுடுத்தி
பிறை நெற்றி தனில்
பொட்டிட்டு
முழு நீள முடி வளர்த்து
சிரம் தனிலே சரம் வைத்து
காலில் கொலுசு ஆடிடவும்
கையில் வளையல்
தவழ்ந்திடவும்
மூக்கு தனில் மூக்குத்தி
மின்னிடவும்
அன்ன நடையில்
அழகுத் தாரகையாய்
வலம் வந்தார்கள்
நம் அன்றைய
தாய்க்குலங்கள்.......!!

காலத்தின் மாற்றமாம்
தொழிநுட்ப வளர்ச்சியாம்
புது நாகரீக தோற்றமாம்
என்ற முகமூடி தனில்
மறைந்து கொண்டு

குட்டையாய்
உடை உடுத்தி
கட்டையாய்
முடி வளர்த்து
கத்தரித்து அதை
கெடுத்து
அரைப் பாவாடை
தான் அணிந்து
அரை உடம்பை
காட்டிக் கொண்டும்
புருவமதை கரிக்குச்சியாய்
தேய்த்துக் கொண்டும்
கை நகங்களை வானளவு
வளர்த்துக் கொண்டும்........!!

காதுகளில் தோடின்றி
நெற்றியிலும் பொட்டின்றி
காணக்கூடா இடத்திலெல்லாம்
வளையங்கள் தொங்கிடவும்
உடலெங்கும் சித்திரமாய்......

இறைவன் தந்த
அழகை கெடுத்து
இயற்கை தந்த
கொடையை விடுத்து
உதட்டெங்கும்
சிவப்பு சாயமாய்
முகமெங்கும்
வெள்ளையடித்துக் கொண்டு
பூனை நடையிலே
அவலட்சணத்தின்
மறு உருவாய்
வலம் வருகிறார்கள்
நம் இன்றைய
தாய் (பேய்) குலங்கள்......!!

எழுதியவர் : அன்புடன் சகி (3-Aug-16, 8:40 am)
பார்வை : 155

மேலே