தமிழ்த் தாய்

எந்நாட்டிலும் தாம் வாழும் மண்ணையோ

தாம் பேசும் மொழியையோ தாயாக

போற்றி வணங்கி வாழ்வதாய் அறியேன்

எந்தன் தாய் தமிழ்நாட்டைத் தவிர

இங்கு தமிழ் மண்ணை தாயாக

உருவகித்து வாழ்த்துப் பாடல் தந்தான்

மாபெரும் தமிழ் மகன் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

பின்னர் அந்த தமிழ் தாய்க்கு கோயில் எடுத்தார்

காரைக்குடியில் ஒரு தமிழ் பக்தர்

அவரே கம்பன் அடி பொடிகணேசனார்

நாம் செய்யும் தவறுகள் அத்தனையும் தாங்குவாள் தாய்

நம் தாய் மண்ணும் நம் பாவங்கள் அத்தனையும் தாங்கிகின்றாள்

தாயை தெய்வமாய்ப் போற்றும் நமக்கு

நாம் வாழும் மண்ணும் மொழியும் தாய் தானே

தாய்க்கு கோயில் இருப்பது இன்று அறிந்தேன்

மெய்ச்சிலிர்த்தேன் மெய்மறந்தேன்

வாழ்க தமிழ் வாழ்க தமிழர் வாழ்க நம் நாடு

வாழிய வாழியவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Aug-16, 8:24 pm)
Tanglish : thamizhth thaay
பார்வை : 391

மேலே