வணிக இயல் பெருமையுடன் எடுக்கலாம்

வணிக இயல் தேர்ந்தெடுக்க கூச்சமா?

ஏன் கூச்சம்? பெருமையுடனே எடுக்கலாம்!

அறிவியலின் எந்த ஒரு கண்டுபிடிப்பும் --
தொழில்நுட்பத்தின் எந்த ஒரு கண்டுபிடிப்பும் --
பொதுமக்கள் பயன்படுத்த ---
சந்தை ஒன்றுதான் மார்க்கம்!

தேசத்துக்கு பெருமை சேர்க்கும் இந்த கண்டுபிடிப்புகள் --
உலகத்தையே வாழ வைக்கும் இந்த கண்டுபிடிப்புகள் --
அறிவியல் அமைப்புகள் சிபாரிசுக்கு பின்
அரசு அனுமதியுடன் நுகர் பொருளாகி
ஆலைகளில் பன்மடங்கு உற்பத்தி ஆகும்!
தயாரிப்பு செலவின்றி உற்பத்தி உண்டா?
தொழிலாளர் ஊதியம் வழங்க வேண்டுமே!
விற்பனை, நிதிப் பிரிவுகள் இயங்க வேண்டுமே!
பொருள் விலையில் இவை அனைத்தும் பங்கேற்குமே!
அதற்கான படிப்புதானே வணிகவியல்!
வணிக சந்தை நுழையாத பொருள்கள் உண்டோ?
இலவசமாய் பொருள் கொடுத்தல் சாத்தியமோ?

தொழிற்கல்வி படிப்புகளும்
அறிவியல் படிப்புகளும்
உயர்ந்தவையே!
ஐயமில்லை தோழா!
அவற்றை படிக்க முடியவில்லை எனில்
வணிகவியல் படிக்க வெட்கப்படாதே!
வணிகவியல் தாழ்வென்று யார் சொன்னார்!
தொழிற்கல்வியும் அறிவியலும்
வழங்கும் பொருட்கள்
விலை நிர்ணயம் ஏற்று
வணிக சந்தைதான் வந்தாக வேண்டும் மறந்து விடாதே!
இலவசமாய் ஏதும் இல்லை நினைவு கொள்வாயே!

ஒன்று மட்டும் நினைவு கொள் தோழா!
வணிகவியல் பட்டத்தோடு நின்று விடாமல்
வணிக மேற் படிப்புகளாம்
Chartered Accountant,
Cost and Management Accountant, மற்றும்
Company Secretary
இவற்றில் ஏதேனும் ஒன்றையும் படி!
எதிர்காலத்தில் நிமிர்ந்து நிற்கலாம்!
கடின உழைப்பிலேயே இவற்றில் தேர்ச்சி பெற முடியும்!
உழைப்பின்றி வெற்றி உண்டோ?
உழைக்க! வெல்க!

(நடுவில் மூன்று ஆங்கில வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்! சரியான தமிழ் பதங்கள் தெரியவில்லை.)

எழுதியவர் : ம கைலாஸ் (9-Aug-16, 3:07 pm)
பார்வை : 953

மேலே