விதவையின் மண கோலம்

கடவுள் படைத்தது ஆண்
பெண் வாழ்வில் ஒன்று
சேர்ந்து மக்களை பெற்று
இல்லற வாழக்கை வாழ
மட்டும் இல்லை...

வாழ்வின் நியதி விதிக்கப்பட்டது
ஒரு ஆண் பெண்ணை திருமணம்
செய்து கொள்வது எல்லாம்...

ஒருவருக்கொருவர் துணையாக
இருப்பதற்கு மட்டும் தான்...
கணவன் மடிந்தால் அவன் நினைவாகவே
விதவையாகவே அவள் வாழ வேண்டும்
சொந்த பந்தம் சொன்னாலும் அவளுக்கு
எதிர்காலத்தில் துணையாக இருக்க
யார் வருவார்...
சொந்த பந்தமா
இல்லை தாய் தந்தையரா
எத்தனை காலம்தான் முடியும்...

தாய்க்கு கணவன் இல்லாவிட்டால்
பிள்ளைகள் கூட சொல் பேச்சை
கேளாமல் மதி கேட்டு வாழ்வர்...
கணவனை இழந்த விதவை
தாய் கிழ பருவம் எய்திய
தருணத்தில் பிள்ளைகள்
துணை நின்று சேவைகள்
செய்வார்களா...

விதவை மறுமணம் முறைப்படி
செய்வது ஒன்றும் குற்றம் ஆகாது...
இச்செயல் பிள்ளைகள் மேல்
அக்கறை இன்மை ஆகாது...

கடவுளின் நியதி பிள்ளைக்கு
தாயின் பாசம் மட்டும்
இவ்வுலகின் வாழ்க்கை முழுமை
ஆகாது...
ஒரு ஆணின் பாசமும்
ஒரு பெண்ணின் பாசமும்
அறிந்து வாழ வேண்டும்
பிள்ளைகள்...

ஒருத்திக்கு ஒருத்தன்
என்பதெல்லாம் அந்த துணை
உயிருடன் இருக்கும் வரைதான்.
இளமமையில் கணவனை
இழந்தவள் மற்றொரு துணை
தேடுவது தவறல்ல...
தன் மனதை பகிர்ந்து கொள்ள
கணவன் என்ற உறவால்
மட்டும் தான் முடியும்...

அவளை புரிந்து கொள்ளவும்
கணவன் என்ற உறவால்
மட்டும் தான் முடியும்...
மகிழ்ச்சியான வாழ்க்கை
வாழ கண்டிப்பாக மறுமணம்
செய்தாக வேண்டும்...
அப்படி செய்தால் தான்
தள்ளாத காலத்தில் சுமையாக
என்ன மாட்டார்கள்...

இளம் விதவைகளே!
வாழ்க்கை வாழத்தான்...
பழைய நினைவுகளுடன் அல்ல!
கடவுளும் படைத்தது
ஒருவரு கொருவர் துணையாக
வாழ...

துணையின் ஆயுள் நீடிக்க
வில்லையென்றால் சோகம் தான்...
ஆனால் அந்த சோகமே
வாழ்வின் இறுதி வரை
அல்ல...

எழுதியவர் : பவநி (10-Aug-16, 11:08 am)
பார்வை : 113

மேலே