நினைத்தேன்•••

முடிவாக நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள்•••"
(நர்மதா)

"நான் உன்னோடு கெட்ட எண்ணத்தில் பார்த்ததும் இல்லை பழகியதும் இல்லை , நீயாக என்னை தொட்டதும் இல்லை எனது உடலோ கரங்களோ உன் மேலே பட்டதும் இல்லை,
நான் உன்னிடமோ நீ என்னிடமோ ஆபாச மானதாக வார்த்தைகளை பேசிக்கோண்டதும் இல்லை, என்பது எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும் ஏன் அந்த கடவுளுக்கே தெரியும் அதேபோல; நான் உன்னிடம் நாணயக் காரனாகத்தான் நடந்து கொண்டேன் அப்படி நான் உன்னிடம் எப்போ தாவது தவறாக நடந்துக் கொண் டிருந்தால் சொல் அப்படி யென்றால் இப்படி யாக நீங்கள் கேட்பதில் அர்த்தம் இருக்கும் நர்மதா"
( கிருஷ்ணா )

"நீங்க சொன்னது எல்லாமே சரிதான் நான் ஒன்னும் உங்கள பிளாக்மெயில் பண்ணல, வீட்டில் என்னை பெண் பார்க்க வர இருக் கிறதா அம்மா சொன்னதை வச்சி நான் உங்ககிட்ட பேசவேண்டி யதாயிட்டது, அதாவது நான் கேட்டதில உங்களுக்கு உடன்பாடு இல்ல அப்படித்தானே கிருஷ்ணா" (நர்மதா)

" நீங்கள் ஒருதடவ என்னோட வீட்டை பாத்தீங்கன்னா என்னைய இப்படி கேட்டே இருக்க மாட்டீங்க அத சொல்ல வந்தேன், உங்க கூட வேலை பார்க்க நான் தினமும் போட்டுகிட்டு வர துணி மணியெல்லாம் என்னோட நிலமை தெரிந்த என் நண்பன் போட்ட பிச்சை, அப்படியான நிலவரம் என் நிலவரம் , நீங்க எங்கே நான் எங்கே இது ஆகும் காரியம் இல்லீங்க நர்மதா" (கிருஷ்ணா )

"உங்க பேக்ரவுண்ட நல்லா ஆராய்ந்த பிறகே இந்த முடிவை நான் எடுத்தேன் அந்த பொருப்பை நான் எடுத்துக்கிறேன் கிருஷ்ணா" (நர்மதா)

" ஐயோ கொஞ்சம் புரிஞ் சிக்க ட்ரை பண்ணுங்க உதாரண மாக என் நண்பன் ஒருத்தன் என்னப் போலத் தான் அவனும் இப்படித்தான் வசதியான பொண்ணுன்னு கல்யாணம் பண்ணிக் கிட்டான் ஒரு குழந்தை பொறந்தது என்ன தகராறோ தெரியல மாமி யார், மாமனார் கட்டின பொண்டாட்டியே செருப் பால அடிச்சி அந்த கொழந்தையை அவன் கையிலேயே கோடுத்து கழுத்தை புடிச்சி வெளியே தள்ளினதும், பத்தாம விவாகரத்தும் பண்ணிட் டாங்க இதையெல்லா கண்கூடாக பார்க்கிற என்னை போன்றவங்க கொஞ்சம் மேலே கீழே கவனம் செலுத்த வேண்டி இருக்கு நர்மதா" (கிருஷ்ணா )

"இதோப்பார் கிருஷ்ணா உன்னோட அழகையோ அறிவையோ அந்தஸ் தையோ பற்றி கவலை இல்ல உங்க மனசை எனக்கு புடிச்சி இருக்கு இதுக்குமேல எனக்கு சொல்லத்தெரியல
அதுக்கப்புரம் உங்க இஷ்டம் நான் வர்ரேன்" ( நர்மதா)

(என்று சொல்லிவிட்டு திரும்பும் போது நர்மதாவின் பள்ளி சிநேகிதி கண்ணில் தெரிந்திருக்க ...)

" ஏய் நர்மதா ஐயோ பார்த்து ரொம்ப நாளாகியது போல தோணுதுடீ, என்னடி மின்சாரத்தைப் போல இருப்பே, இப்போ பொட்டி பாம்பா ஆயிட்டே, சம்திங் ராங்" (சிநேகிதி )

"அப்படியெல்லாம் ஒன்னும்••••" (நர்மதா)

" ஏங்கிட்ட பொய்சொல் லாதே என்ன ஒரு கெம்பீரம், என்ன ஒரு ஆர்பாட்டம், என்ன ஒரு துடிப்பு, என்ன ஒரு ஸ்டைலு இப்போ எங்கே போச்சி எல்லாம் ரொம்ம சிம்பிலா டிரஸ் சாதுமாதிரி பிஹாவ் பண்ற" (சிநேகிதி)

" நம்ம காலேஜ்ல ஒரு ட்ராமா போட்டோமில்ல" (நர்மதா)

" ஆமாம் நீ அதுல கிராமத்துப் பொண்ணா நடிச்சே சூப்பரா இருந்ததுடீ, அதே கதைய உன்னோட ட்ராமால சீப் கெஸ்டா இன்வைட் பண்ணியிருந் துச்சே நம்ம அட்மினிஸ்ட் ரேஷன் டைரெக்டர் சந்தன ராஜ் அவரு படமாக்கப் போரா ராம் " (சிநேகிதி)

" நான் இப்படி மாறியதுக்கு காரணமே நான் போட்டுக் கிட்ட வேஷம் தான்••" (நர்மதா)

"எப்படி•••" (சிநேகிதி)

" வேஷத்த போட்டுக்கிட்ட பிறகு கண்ணாடியில என்னோட முகத்தை பார்த்தேன், படு கேவலமா இருந்தது இப்படியும் இருக் கும் பெண்கள் சந்தோஷ மாக இல்லாமலா இருக் கிறார்கள் யாரும் அப்படிப் பட்டவர்களை காதலிக் காமல் தட்டிக் கழிப்ப தில்லையே, நான் வசதியான குடும் பத்தில் பிறந்துவிட்ட தனால் வந்த திமிரும் தெனா வெட்டுமா என என்னை சிந்திக்க வைத்துவிட்டது, அப்பவே என்னோட இமா ஜின் எல்லாம் தவிடுபொடி யாயிடுச்சி பணக்கார வாழ்க்கையை ஒன்னு விடாம வாழ்ந்து பார்த்து விட்டேன் அதனால இப்போ ஏழ்மை யான வாழ்க் கையை வாழ்வ தென்ற முடிவுக்கு வந்தேன்" (நர்மதா)

" ஆமாம் எனக்கு முன்னேயே நீ யாருட னயே பேசிக்கிட்டு இருந்தாயே" (சிநேகிதி)

"அதுவா என்னோடு ஆப் பீஸ்ல வேலபார்கிற வருதான்" (நர்மதா)

"ஓ நான் லவ்வரா இருக்கு மோன்னு நெனைச்சேன்" (சிநேகிதி)

" நீ நெனைச்சது சரிதான் ஆனா சரிபட்டுவராத மாதிரி தோணுது" (நர்மதா)

"ஏன் என்னாச்சி•••" (சிநேகிதி)

" ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மனுஷனாக இருக்கிறார் யாரோ என்னைய பெண் பார்க்க வரயிருக்கிறார்களாம், யாரோ முகந்தெறி யாதவங்கள கட்டிக்கிட்டு பயந்து பயந்து வாழறத விட , முகம் தெறிஞ் சவங்கள கட்டிக்கிட்டு நிம்மதியா இருக்கலா மேன்னு பேசிப்பார்த்தேன், ஆளு பயந்த சுபாவம் போல இருக்கு புடிகொடுக்காம பேசினார் " (நர்மதா)

"மேற்கொண்டு •••" (சிநேகிதி)

" மேற்கொண்டு என்ன அந்த ஆள் பேக்ரவுண்டை அவருக்கு தெரியாத வாரே நோட் பண்ணினேன் வெரி வெரி புவர் பேமிலி அவரு என்னை மறுக்கிறதால அவரு மேல வெறுப்போ கோபமோ எதுவும் வரல" (நர்மதா)

" சரி எனக்கு நேரமாயிடுச்சி••• இதுக்கு உங்க வீட்ல•••" (சிநேகிதி)

" சிக்கல் இல்லாமல் இருக் குமா••• பாக்கலாம் இந்த பெண் பார்க்கும் சங்கதி கொஞ்சம் தள்ளி போனா நல்லா இருக்கும்" (நர்மதா)

"கவலைப்படாதே நாம் வணங்கும் தெய்வத்தின் கணக்குன்னு ஒன்னு இருக்கும் சரி நேரமாவுது நான் வரேன் அப்பறம் மீட் பண்ணலாம்" (சிநேகிதி)

( நர்மதாவின் வீட்டில் சந்தன ராஜ் நர்மதாவை அவர் படத்தில் நடித்துக் கொடுக்க கேட்டுக் கொள்ள வந்தமர்ந் திருக்கும் வேளை)

(மாப்பிள்ளை வீட்டாரும் பெண்ணை பார்க்க வந்து நர்மதாவின் வீட்டுக்குள் நுழைந்தார்கள்)

(மாப்பிள்ளை வீட்டார் விஷயம் அறிந்து சட்டென எழுந்து)
" நாங்கள் வந்த நேரம் சரியில்லை என நினைக் கிறோம் நாங்கள் வேறொரு
நாள் பார்த்து வருகிறோம் இப்போதைக்கு எங்களை போக அனுமதியுங்கள்" என்று வெளியே வந்து விட்டார்கள் மாப்பிள்ளை வீட்டார்

" நர்மதாவுக்கு முகத்தில் பெருமகிழ்ச்சி தாண்டவ மாடியது கடவுளுக்கு நன்றி என மனதளவில் கூறிக் கொண்டாள்"

"பெற்றோர்கள் முகம் வருத் தத்தை பரதிபலிக்க வைத்தது"

மாப்பிள்ளை வீட்டார்கள் மறுபடி வரமாட்டார்கள் என்று ஆணித் தரமான நம்பிக்கை கொண்டாள் நர்மதா

சந்தன ராஜும் நாம் நேரங்கெட்ட நேரத்தில் வந்து விட்டோமோ என்று தனக்குள் வருந்தினார்

" சார் வந்தவங்க நம்மால திரும்பி போயிட்டாங் களேன்னு வருந்துறீங்கன்னு நெனைக்கிறேன் "( நர்மதா)

" என்னம்மா சொல்லிவச்ச மாதிரியே நான் நெனைச்சத அப்படியே சொல்றீங்க" (டைரெக்டர்)

" என்ன திடீர்னு பக்கத்தில எஙகேயாச்சும் சூட்ங்கா ஆமாம் எங்க வீட்டை எப்படி கண்டு பிடிச்சீங்க யாருதோ வீடுன்னு வந்து இருப்பீங்க ஐயோ அப்படி இருக்காது உங்க படத்துக்கு எங்க வீட்டை லொக்கேஷன் பாக்க வந்து இருப்பீங்க நான் ஒரு மடச்சி குடிக்க என்ன கொண்டுவர" (நர்மதா)

( இல்லம்மா ஒன்னும் வேணாம் நான் உங்க அப்பா அம்மாகிட்ட கொஞ்சம் பேசனும் கொஞ்சம் கூப்பிடுறீங்களா
கொஞ்சம் இரும்மா....உங்க ரேடியோ வேலிம்ம கொஞ்சம் ஜோரா வைங்க..போதும் போதும் இந்த டியூன இப்படி உட்காரு பிறகு கூப்பிடலாம்" ( டைரெக்டர்)

வைலின் வாசித்தவர் ஏபிஆர் சாப்ட்வேரில் பணிபுரியம் கிருஷ்ணா என்பவரால் வழங்கப்பட்டது
( ரேடியோ நியூஸ்)

" ஐயோ...அவர் எங்க ஆப்பீஸ்மெட்ங்க சார் ...இவ்வளவு அருமையா வைலின் வாசிப்பாருன்னு யாருக்கும் தெரியாது சார்"
(நர்மதா)

" அப்படின்னா அவருக்கு உங்க வீடு தெரியமா" (டைரெக்டர்)

" தெரியாது சார்" (நர்மதா)

" தெரியாதா சரி அவர உங்களுக்கு தெரிஞ்சிருக்கே அது போதும் பிறகு பேசிக்கலாம் இப்போ அப்பா அம்மாவை•••• " (டைரெக்டர்)

" இதோ அழைச்சிக்கிட்டு வரேன் சார்•••" (நர்மதா)

"வணக்கம் சார்•••" (நர்மதாவின் தந்தை)

" ஒன்னுமில்ல உங்க பொண்ணு அவுங்க காலேஜ்ல ஒரு ட்ராமா போட்டது, அதுக்கு சீப்கெஸ்டா என்னை கூப்பிட்டு இருந்தாங்க உங்க பொண்ணோட நடிப்புல ஒரு ரியாலிட்டியை பார்த்தேன் ரொம்ப நேச்சுரலா இருந்தது நானும் எங்க பீல்டுல யார் யாரையோ அந்த கேரக்டருக்கு மேச் பண்ணிப் பார்த்தேன்
யாரும் உங்க பொண்ணு அளவுக்கு சூட்டாவல உங்க பொண்ண விட்டா வேர ஆள போட விருப்பமில்ல உங்க பொண்ணு காலேஜ்க்கு போயி உங்க அட்ரச வாங்கிக்கிட்டு நேரா உங்கள சந்திக்க வந்தேன் இதுல பொண்ணோட விருப்பம் உங்க விருப்பத்த தெரிஞ்சிக்க வந்திருக்கேன் ஒரு நல்ல முடிவா உங்களுக் குள்ள கலந்து ஆலோசித்து சொன்னீங்கன்னா நான் மேற்கொண்டு......" (டைரெக்டர்)

" சரி சார் தீர ஆலோசிச்சி உங்களுக்கு தெரியபடுத் துரோம்" (நர்மதாவின் தந்தை)

" இது என் கார்டு•••" (டைரெக்டர்)

" சரிங்க சார்••••" (நர்மதாவின் தந்தை)

•••••••
" ஹலோ கிருஷ்ணா உங்க இசையை ரேடியோவில கேட்டேன், நான் மட்டுமில்ல என்னோ கூட ஒரு பட டைர்க்டரும் இருந்தார், உங்க இசை அவருக்கு ரொம்ப புடிச்சிப் போச்சி அநேகமா அவர் உங்களை கான்டாக்ட் பண்ணலாம்". (நர்மதா)

" அப்படியா••• நெசமாவா சொல்றீங்க••• என் நெடுநாள் ஆசையும் அதுதான் ஆனா எங்க அம்மாவ விட்டுவிட்டு போக முடியாத சூழ்நிலையால மேற் கொண்டு முயற்சி பண்ணல நானும் என் நண்பனும் மூனு வருஷமா வைலின் கத்தோம் அவன் மூலமாதான் இந்த சான்ஸ் எனக்கு கெடைச்சது" (கிருஷ்ணா )

" அனேகமாக அவர் உங்களை சந்திக்கலாம்" (நர்மதா)

" அப்படியா••••". (கிருஷ்ணா )

" உங்களுக்கு ஒன்னு தெரியுமா என்னை பெண் பார்க்க வந்வங்களும் அந்த டைரெக்டர் வந்த அன்னைக்கே வந்தாங்க அவுங்களோட இன்டர்னல் பிராப்லம் என்னவோ அது தெரியாது ஆனா நாங்க இன்னொரு நாளைக்கு வர்ரோம்ன்னு சொல்லிட்டு உடனே போயிட்டாங்க" (நர்மதா)

" அடடடே என்னவாக இருக்கலாம்•••" (கிருஷ்ணா )

" நோ ஐடியா இனொன்னு சொல்ல மறந்துட்டேன் என்னை அவரோட படத்துல ஒரு இருவது சீன்ல நடிக்கவும் கேட்டாரு" (நர்மதா)

"அது என்ன இருவது சீன் மட்டும்" (கிருஷ்ணா )

"அதுக்கப்புறம் நான் செத்துப் போவனுமாம்" (நர்மதா)

"ஐயய்யோ ••••!" (கிருஷ்ணா )

"பயப்படாதீங்க நான் உயிரோடத்தான் இருப்பேன் அவரு எடுக்கப்போற படத்தில ••••! " (நர்மதா)

" அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க•••" (கிருஷ்ணா )

" அது என் இஷ்டமா என்ன அப்பா அம்மா சரின்னு சொன்னா போவேன்•••" (நர்மதா)

"என்ன செத்துப்போவச் சொல்லியா•••?" (கிருஷ்ணா )

"ஹ••• ஹ••• ஹ••• என்ன ஜோக்கா••?" (நர்மதா)

" உங்களுக்கு பேரும் புகழும் வாசல்ல நின்னுக் கிட்டு இருக்குன்னுங்க•••" (கிருஷ்ணா )

"அப்படி உங்களுக்கும் எனக்கும் அமைஞ் சிப்போச்சி•••• அமைஞ்சிப் போச்சின்னா•••" (நர்மதா)

" நீங்க ஏங்கிட்ட கேட்டதை கன்சைடர் பண்ணலாம்" (கிருஷ்ணா )

"ஆமாம் நீங்க நெனைச்ச தகுதி வந்துடுமில்ல•••" (நர்மதா)

சிலர் நடக்கும் என்பார் நடக்காது சிலர் நடக்காது என்பார் நடந்துவிடும் ஆனால் நானோ நடக்கும் என நினைத்தேன் நடக்கப் போவது உறுதியாகிறது

நினைத்தேன் நினைத்தது நினைத்தபடி நடந்தது
••••••
ஆப்ரகாம் வேளாங்கண்ணி மும்பை

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (11-Aug-16, 8:26 pm)
பார்வை : 463

மேலே