உன்னுடனே வந்தேன்

தோன்றினேன் உனக்கு முன்னரே இம்மண்ணில்
தேர்ந்துநீ வாழ்வதற்கொரு வழியாக! நீ
ஓங்கி உயர்ந்த பின்னர் என்னை
ஒதுக்கி வைத்தாய் ஒரு வழியாக!

வாழ்வியலின் முழுதுக்கும் பயன்படுத்திப் பின்
வாழ விடாமல் என்னைத் தடுத்தாய்!
தோட்டத்தில் மரமாக இருக்கும் என்னைத்
தோற்ற மின்றி அழியச் செய்தாய்!

என்ன செய்தாய் என்னை அழித்து?
என்ன செய்வாய் என்னை இழந்து?
சந்ததிக்கு என்னை அறிமுகம் செய்யாமல்
சாவதற்குச் செய்தாயோ வழியை இங்கு?

பல்வகை உயிர்கள் என்னை நம்பினாலும்,
பாவங்கள் செய்கிராய் உன்னை அறியாமல்!
ஊனையும் உயிரையும் அழித்து விட்டுவெறும்
உடலை வைத்து வாழ்வாயோ நீ?

உன்னுடனே வந்தேன் நான் மரமாக!
உனக்காகவே வந்தேன் நான் உயிராக!
என்னையேதோ செய்தாய் தவறாக! நானின்றி
நீயும் ஆகப் போகிறாய் மண்ணாக!

விழித்துக்கொள் விழித்துக்கொள் நீ மனிதா!
அழிவு வருவதற்கு முன் நீயும்
காத்துக்கொள் காத்துக்கொள் உன்னை! விளைவாகக்
காக்கச்செய் காக்கச்செய் உலகை!

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (12-Aug-16, 9:01 pm)
Tanglish : unnudane vantheen
பார்வை : 176

மேலே