பணத்தை சாப்பிட முடியாதென்று உணரும் காலம் வரும்

*தக்காளி விலை ஏறிவிட்டது, வெங்காயம் விலை ஏறிவிட்டது*,
*பருப்பு விலை ஏறிவிட்டது, பால் விலை ஏறிவிட்டது*, *இவைகள்தான், பொதுமக்களின் தினசரி குமுறல்* 😩 ..

நான் தெரியாமல் கேட்கிறேன்!!
என் மகனை _*என்ஜினியர்*_ ஆக்குவேன் ,
என் மகனை _*டாக்டர்*_ ஆக்குவேன் ,
என் மகனை _*கலெக்டர்*_ ஆக்குவேன் ,
என் மகனை வக்கீல் ஆக்குவேன் என்று கூறும் _*பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வேளாண்துறை வல்லுனராக்குவேன் என்றும், விவசாயி ஆக்குவேன் என்றும் கூறுவதில்லை*_..

*COLGATE* விலை ஏறலாம்,
_*HAMAM SOAP*_ விலை ஏறலாம்,
_*PEPSI*_ விலை ஏறலாம்,
_*CINEMA TICKET*_ விலை ஏறலாம்,
_*KFC CHICKEN*_ விலை ஏறலாம்,
_*THALAPAAKATU BRIYANI*_ விலை ஏறலாம்,
_*GOLD*_ விலை ஏறலாம்,
_*DIAMOND*_ விலை ஏறலாம்,
எத்தனை பேர் இதற்காக வீதியில் இறங்கி போராட வருவீர்கள்..

*6 மாதம் 1 வருடம் , தண்ணீர் இல்லாமல் எத்தனையோ செலவு செய்து, வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு அறுவடை செய்து , கொஞ்சம் கூட லாபம் இல்லாமல்* ஒரு பொருளை விற்க விவசாயி மட்டும் என்ன விதி விலக்கா..
விவசாயி என்ன _*REMOTE CONTROL*_-இல் அரிசியையும் , பருப்பையும் உருவாக்குகிறானா? இல்லை _*JAVA, C++, PHP PROGRAM*_ ல் உருவாக்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்களா???..
🌾 🌾 _விவசாயியையும், விவசாயத்தையும் வாழவிடுங்கள்_..
இல்லையேல், *கடைசி மரமும் வெட்டுண்டு, கடைசி நதியும் விஷமேறி., கடைசி மீனும் பிடிபடும்போதுதான் உரைக்கும், பணத்தை சாப்பிட முடியாதென்று*....

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (13-Aug-16, 8:14 am)
பார்வை : 384

சிறந்த நகைச்சுவைகள்

மேலே