மசுக்கா சசுக்கா

யாரப் பாட்டி மசுக்கா சசுக்கா-ன்னு கூப்படறீங்க?

@#@
நா யாரடி பொன்னி கூப்படப்போறென். எம் பேத்திங்க அந்த குரும்புக்கார ரட்டைப் பொறப்பு பிள்ளைங்களத்தாங் கூப்படறென்.
@%@@
அவுங்க பேர எப்படிச் சொன்னீங்க?
@#@
என்னடி பொன்னி புதுசா கேக்கற? 50க்கு 50ங்கற பிசுகோத்துல மசுக்கா சசுக்கா -ன்னு போட்டிருப்பாங்களாம். அந்தப் பேருங்களையே எம் மவனும் மருமகளும் எம் பேத்திங்களுக்கு வச்சுட்டாங்கடி பொன்னி. அந்தப் பேருங்களுக்கு என்ன அர்த்தம்னு பெத்தவங்களுக்கே தெரியாதடி.
#%@
ஓ..... இப்ப புரியுது பாட்டிம்மா. 50/50ங்கற பிஸ்கட்ல மஸ்கா
சஸ்கா-ன்னு அச்சடிச்சிருப்பாங்க பாட்டிம்மா. அந்த சொற்களைத்தான் உங்க பேத்திங்களுக்கு அண்ணனும் அண்ணியும் வச்சிருப்பாங்க.
@##%#@@@@@@@@@@@@###@########
மஸ்கா =
கொங்கணி/மராத்தியில் 'வெண்ணெய்'
இந்தியில் 'நம்பத் தகுந்த'
செவ்விந்தியர் மொழியில் 'வலிமையுடைய' '
சஸ்கா = ஆட்டிப்படைக்கும் ஆசை, எண்ணம்.
@@@@#########@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழர்களின் இந்திப்பெயர் வெறியைச் சுட்டிக்காட்டவே இந்த துணுக்கு.

எழுதியவர் : மலர் (14-Aug-16, 2:36 pm)
பார்வை : 359

மேலே