மறுமணம்

விரும்பாத ஒருவனோடு
வரதட்சணை சந்தையில்
அதிக விலைக்கு போகாத - எனை
இணைத்து வைத்து

நன்றாய் வாழ வேண்டுமென
வழி அனுப்பி வைத்தார்கள்
ஒரு குடிகாரனோடு என்னை...

அவனோடுதான் கூடி
எப்படி வாழ முடியும்
இன்பமாய்...?

தினம் குடித்து குடித்து
அவன் குடலையும் உடலையும்
கெடுத்தது மட்டும் போதாதென்று....
என் வாழ்க்கையையும் கெடுத்துவிட்டு
தொலைந்து போய்விட்டான்...
பெண்ணாய் இருந்த என்னை
மூன்று மாதம் முடியும் முன்னே
பூவையும் பொட்டையும் அழித்துவிட்டு
இளம் விதவையாய் ஆக்கிவிட்டு
அவன் போய் படுத்துக் கொண்டான்
சுடுகாட்டில்...!
இனி நான் என்ன செய்வேன்
சாதி மதம் பிடித்த என்வீட்டில்
மதுக்கடைகள் நிறைந்திருக்கும் இந்நாட்டில்...?

"விதவை" எனும் கோலத்தில் பொட்டில்லை என்று
அவளும் வைக்க வேண்டும் குங்குமம் என்று
அன்றொரு தலைவன் மாற்றினானே
அவளை "கைம்பெண்" என்று
அதை கூட மறந்துவிட்டனரே இன்று...!

ஒரு கிராம் குறைந்தாலே
திருமணம் என்பது குதிரைக் கொம்பு
இந்த இளம் கைம்பெண்ணிற்கு
ஆசைத் தெம்பிருந்து என்ன செய்ய?
துணிவு இருந்தால்தானே
விரும்பி வருவான் எனை மறுமணம் செய்ய...

சாதி மதம் பாராமல் இருந்தால்தானே
காதல் வேகத்தோடு எழுந்து வருவான் ஒருவன்
குடும்ப கெளரவம் பாதிக்குமென்று
அவனையும் இன்று மறுத்தால்....
என்னாகும் என் வாழ்க்கை....?
கேள்வி குறியே ஆனாலும்.....
விட்டுக் கொடுக்க மாட்டார் சாதி இனத்தை....
அப்புறம் எப்படி? இந்த முரண்பட்ட சமூகத்தில்....
விதவை மறுமணம்...? இந்த கைம்பெண் வாழ்க்கை
ஒரு நடை பிணம்.....உல்லாசமாய் வாழ வேண்டுமென்றால்.
கை நிறைய இருக்கணுமே...பணம்....பணம்...பணம்...
பத்து பணமிருந்தால் போதும்...நான் வாழ
சாதி மதமெல்லாம் தடை போடாது ஒருபோதும்...

எழுதியவர் : கிச்சாபாரதி (18-Aug-16, 11:03 pm)
Tanglish : marumanam
பார்வை : 198

மேலே