பேனா

இந்த கவிதை ஒரு பேனாவின் மரணத்தை சொல்ல கூடியது .......அந்த மரணம் இயறக்கை மரணம் அல்ல அது தெரிந்து செய்த கொலையும் அல்ல .....மாங்காய்க்கு ஆசை பட்ட சிறுவன் கல் எடுத்து மரத்தை நோக்கி எறிகிறான் ....ஆனால் கல்லோ காயில் படாமல் கிளையில் இருக்கும் பறவையின் மீது படுவது மாதிரி ....காலத்தின் கலவரத்தால் காலம் சென்றது பேனா .... ஆனால் பேனாக்கு தெரியுமா அவன் தெரிந்து செய்தானா தெரியாமல் செய் தான என்று ...........


*
பல வார்த்தைகள் என்னுள்
எழுதயின்னும் தொடங்களா
பேச ஆரம்பிக்காத குழந்தை நான்

*
என்ன வௌ கொடுத்து வாங்கனவன்
ஒரு மருத்துவனா ,பொறியாளனா
எழுத்தாளனா,கவிஞனா

ஒரு தகவலும் அரியலயே

*
ஒருவனோட சோகத்துக்கு கண்ணீர் ஆயிருப்ப
காதலுக்கு கவிதை எழுதியிருப்ப
சந்தோஷத்துக்கு சிரிப்பா ஆயிருப்ப

*
பரிட்சை நேரத்துல மாணவனுக்கு
ஆயுதம் ஆயிருப்பேன்
கடன் கேட்டவனுக்கு
விருந்தினராய் ஆயிருப்பேன்

*
ஏழை மாணவன் தோழனுக்கு
தரும் பிறந்த நாள் பரிசாய்
ஆயிருப்பேன்

*
நீங்கள் என்னோடு பேசினால்
அதையே பேசும் கிளி
உங்கள் தகவலை தெரிவிக்கும்
தூது புறா

*
என்ன நெனச்சா..?
எழுதவா நெனச்சா..?
எரி மலையில தள்ள நெனச்சா..?

*
பேனா முனையும் ரத்தம் பார்க்கும்
தவறா புரிஞ்சு கொசு ரத்தம் பார்க்க
எடுத்தானா.?

*
நீர் சுழல்ல மாட்டனவன் எல்லாம் தப்பிச்சா
கொசு வத்தி சுருள்ள மாட்டன
என்னால தப்பிக்க முடியலையே

*
புள்ளி கூட வைக்காத
எனக்கு கொல்லி வச்சானே
கொசு வாத்தியால உடல எரிச்சு வச்சானே

*
காலையில் எழுந்து ஒப்பாரி வச்சானே
எல்லோரும் பாக்கதா காட்சுக்கு வச்சானே
மெலிந்த உடல் மெழுகென உருகியது

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (24-Aug-16, 8:24 pm)
Tanglish : pena
பார்வை : 83

மேலே