தினம் ஒரு தத்துவ பாட்டு - 35 = 204

“பிச்சையெடுக்கிற வாழ்க்கையும் ஒரு வாழ்கையா..?-அதையும்
பிச்சிப்பிடுங்குற வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா…?”
சக்தில்லாதவன் பிச்சையெடுத்தா அது சரித்திரம் – ஆனால்
சக்துள்ளவன் பிச்சையெடுத்தா அது தரித்திரம்..!

எச்சில் இலையை நக்கிப்பிழைக்கும் கூட்டமே - உனக்கு
புத்திக்கூர்மை இருந்தும் பிச்சையெடுப்பது வெட்கமே
தொழில்வளம் கொட்டிக்கிடக்கும் நாட்டிலே
நீ கையேந்தும் பிழைப்பை ஏன் நடத்துறே..

ஏக்கம்கொண்டு வாழ்க்கையை துறக்காதே - உனக்கும்
மறுவாழ்வு திட்டமொன்று இருப்பதை மறக்காதே..!
சரியாக செயல்பட நீ நடத்துப் போராட்டம்
உனக்குப்பின்னால் திரண்டுவரும் பெருங்கூட்டம்!

இமயம்முதல் குமரிவரை நமது நாடுதான்
நாடுமுழுதும் நிறைந்திருக்கிறான் பிச்சைக்காரன்தான்
நாட்டுக்காகப் பாடுபடும் நன்மை விரும்பிகளே
நாடிவரும் பிச்சைக்காரனை தத்து எடுங்களேன்..!

எழுதியவர் : சாய்மாறன் (26-Aug-16, 5:22 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 153

மேலே