தண்ணியா- பாலா - மோரா - கொழம்பா - தொவையலா--

பாட்டிம்மா.....!
@#@
யாருடி என்னக் கூப்படறவ?
#@#
நாந்தாம் பாட்டிம்மா, செல்லம்மா வந்திருக்கிறேன்.
@%@
அடியே செல்லம். வாடி....வாடி. உன்னப் பாத்து ரண்டு மாசம் ஆகுதடி.
@#@
பாட்டிம்மா, உங்கள நாம் பாத்துட்டுப் போன அடுத்த நாளே எனக்கு பெண் கொழந்தை பொறந்திருச்சு.
@%@
உன்னோட வீட்டுக்காரன் மாரி வந்து எங்களுக்கெல்லாம் இனிப்பு பலகாரம் குடுத்து அந்த நல்ல தகவலச் சொல்லிட்டுப் போனாண்டி. சரி, பாப்பாவுக்கு ரண்டு மாசம் ஆகுது. நல்லா இருக்காளா? அவுளுக்கு பேரு வச்சிட்டீங்களா? நாந்தா ஆறு மாசமா படுக்கையில கெடக்கிறென். என்னால உன்ன வந்து பாக்கமுடியாத நெலமை.
@%@
அதெல்லாம் எனக்குத் தெரியும் பாட்டிம்மா. நாங்க எல்லாம் உங்க வாழ்த்துக்களால நல்லா இருக்கறோம். பாப்பாவுக்கு தங்கம்- னு பேரு வைக்கலாம்னு ஆசப்பட்டேன். என்னோட வீட்டுக்காரர்தான் "பாப்பாவுக்கு தமிழ்ப் பேரே வைக்கக் கூடாது. தமிழ வளக்க வேண்டிய பொறுப்பில இருக்கறவங்கள்ல 99% பேரே அவுங்க பிள்ளைங்க, பேரப்பிள்ளைங்களுக்கெல்லாம் இந்திப் பேருங்களத்தான் வச்சுக்கறாங்க. நாம மட்டும் நம்ம பாப்பாவுக்கு தமிழ்ப்பேர வச்சா நம்மள எல்லாம் கேவலமா நெனப்பாங்கடி செல்லம். அதனால நம்ம பாப்பாவுக்கு 'தன்யா'-ங்கற இந்திப் பேரையே வச்சிடலாம்"னு சொல்லி கட்டாயப்படுத்திட்டாரு பாட்டிம்மா. இன்னைக்குத்தான் பெயர் சூட்டு விழாவை எங்க வீட்ல நடத்தினோம். உங்களுக்கும் தாத்தா மாமா அண்ணி கொழந்தைங்களுக்கெல்லாம் பலகாரம் இனிப்பெல்லாம் குடுத்துட்டு போகத்தான் நா வந்தென் பாட்டிம்மா.
@%@@
ஏண்டி பாப்பாவுக்கு தண்ணியா-ன்னா பேரு வச்சிருக்கீங்க? தமிழருங்க போற போக்கப் பாத்தா மோரா, பாலா, கொழம்பா, உப்புமா, சட்டினி, வடை, முறுக்குன்னெல்லாம் பேரு வச்சுக்குவாங்க போல இருக்குதடி தங்கம்.
@#@
நாம என்ன செய்யறது பாட்டிம்மா. தமிழ் ஆசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் நாட்ல இருக்கற அரசியல்வாதிகள்கூட தமிழ மதிக்கறதில்ல. எல்லாம் சினிமா மோகத்திலே இந்திப் பெயர் வெறி பிடிச்சவங்களா இருக்காங்க. தமிழச்சியாப் பொறந்ததுக்கு நா ரொம்ப வெக்கப்படறென் பாட்டிம்மா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க, மொழிப் பற்றை வளர்க்க, மொழி சார்ந்த இனப்பற்றை வளர்க்க, பிற மொழிப் பெயர்களின் பொருள் அறிய.
@@@@@@@@@@@@@@@@@
தன்யா = உருவாக்குபவர், முடிவு எடுப்பவர் (கிரேக்க மொழி), தரத்தில் மிக உயர்ந்த (லத்தீன் மொழி), நெருப்பு/கோப அரசி (ரஷ்ய மொழி), மகள், உடல், குடும்பம் பற்றிய, தேவதை இளவரசி (சமஸ்கிருதம்).

எழுதியவர் : மலர் (26-Aug-16, 5:48 pm)
பார்வை : 165

சிறந்த நகைச்சுவைகள்

மேலே