வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையின தத்துவம்
அறிய துடித்தேன்

யாரிடம் கேட்கலாம் என்று
நிணைத்தேன்

என் ஆசான் இடத்தில் தஞ்சம் புகுந்தேன்

சகஜமாய் கேள்விகளை அவரிடம் கேட்டேன்

ஜனனத்தின் முன் என் இருப்பிடம் எதுவோ
மரணத்தின் பின் நான் போவது எங்கே

உடனே வந்தது அவரின் பதிலும்

இறைவனின் மனதில் கருவாய் மலர்ந்தாய்
அதன் பின் தொடர்ந்தது உன் ஜனனத்தின் பயணம்

மரணத்தின் பின் உன்னை அழைப்பதும் அவன்தான்
கொடுத்ததை எடுப்பது "அவன்" பரம்பரை பழக்கம்

மழலையில் இருந்தேன்
மகிழ்ச்சியில் திளைத்தேன்

பின்னர் அதிலே சிறு மாற்றம் கண்டேன்
காரணம் அறிய நானும் முயன்றேன்

முடியாததினால் உம்மிடம் வந்தேன்

மழலைப் பருவம்,
ஆண்டவன் - நம் மனதில் குடிகொள்ளும் பருவம்

ஆனந்த வெள்ளத்தில் இருப்பது சகஜம்
பின்னர் அவனும் மெல்ல நகர்ந்தான்

நிஜத்தின் சாயலை சந்திக்க வைத்தான்
அதன் பலனதான் உன் மனம் மாற்றத்தை உணர்ந்தது

குழந்தைப் பருவம் அறியாப் பருவம்
உறவின் மடியில் நான் பயணித்த பருவம்

நட்பை அங்கே காணவில்லை
அது ஏன் என்று எனக்கு புரியவுமில்லை

புன்னகையுடனே அவரும் சொன்னார்

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் தான்
தக்க சமயத்தில் உனக்கு புரிய வைப்பான்

மருந்தாய், வடிகாலாய் நட்பையும் தருவான்
அந்த பக்குவம் உனக்கு வரும் வரை காத்திருப்பான், என்றார்

கணவுகள் வருவது எதனால் என்றேன்

நீ தூங்கும் போது, உன் தூங்கா மனதின்
எண்ண வெளிப்பாடுகள் தான் அவை என்றார்

பருவ கோளாறு எதனால் என்றேன்

உன் வயதும், மனமும் செய்துகொள்ளும்
உடன்பாடுகளின் முடிவே அது என்றார்

அனுபவம் என்ற சொல்லின் பொருள்தான் என்ன என்றேன்

தவறுகள் நிகழும் பொழுது,
அதை உணர்ந்து,
திருத்திக் கொள்வதே
சிறந்த அனுபவம் என்றார்

என்னை நானே அறிவது எப்படி என்றேன்

மனமும், அறிவும் புரிதல் கொண்டால்,
உன்னை நீயே நன்கு அறிவாய் என்றார்

இன்பம், துன்பம் என்ற பாகுபாடு ஏன் என்று கேட்டேன்

இந்த இரண்டில் ஒன்றே நிரந்தரம் என்றால்
வாழ்க்கை அலுத்துப் போகும் என்றார்

கோபம், பொறாமை, சண்டை, சச்சரவு இவை தேவையா என்றேன்

விதவிதமான மனிதர்கள் உண்டு
அவர்கள் மனங்களிலும் எண்ணங்கள் உண்டு

எல்லாம் ஒரே ரகமாய் இருப்பது இல்லை

அதன் வெளிப்பாடுகள் தான்
நீ மேலே குறிப்பிட்டவை என்றார்

அன்பு, பாசம் பொருள் என்ன என்றேன்

ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவதில்
வரும் உணர்வுதான்
இவை இரண்டும் என்றார்

நானும் சற்று மௌனமாய் இருந்தேன்

என்னை தட்டி, என் சுய நினைவிற்கு அழைத்தார்

இன்னும் கேள்விகள் ஏதேனும் உண்டா என்றார்

சகலத்தையும் புரிய வைத்ததால்

எதவும் இல்லை என்று தலையை அசைத்து,
செய்கையில் சொல்லி,

அவர் பாதம் தொட்டு வணங்கி

அவரிடம் இருந்து விடை பெற்று வந்தேன்

ஆசான் என்றால்,

அறிவு போதித்தல் என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (28-Aug-16, 8:24 pm)
Tanglish : vaazkkaip paadam
பார்வை : 60

மேலே