கல்வி

காலமெல்லாம் ஞானம் பெற
காத்திருந்து கற்றேன்
கற்றபடி நடந்தேன்

கறைபடியா வாழ்க்கைக்கு வித்து
கல்வி என்றுணர்ந்தே
கண்ணில் பட்டவர்க்கெல்லாம்
கலங்காது கற்பித்தேன்
கற்றலை ஊக்குவிக்க

காற்றாய் மாறியே தான்
கல்லையும் சிற்பமாக்கும்
கலையினை கற்க செய்தேன்

களவும் கற்றுமற என்றே தான்
களவையும் செய்தேன்
கள்ளனாய் மாறியே

கல்லணை போல்
காலமெல்லாம் நீரினை
கடல் போல் தேக்கி வைக்க
கட்டிட கலையையும்
கற்பிக்க வைத்தேன்

காக்கை போல் பகுத்துண்டு
கரைந்து கரைந்து கரம் கோர்க்க
கற்பித்த காலம் அது

கற்பித்தலையே வாழ்வின்
கருத்தாய் கற்றே தான்
கலந்தேனே காவியமாய்

கல்வி யால்தான்
களங்கமற்ற சமுதாயம்
கட்ட முடியும் என்றே தான்
கற்றறிந்த சான்றோர்களை
காலமெல்லாம் தோற்றுவித்தேன்
கற்பிக்க ஞாலமெங்கும்

கற்பித்த சில மூடரினம்
கல்வியை விற்கத்தான்
கற்றதுவே கண்முன்னே
களத்தில் நின்று போராட
கைகளில் வலுக்கொண்டு
தோள்களில் தினவெடுத்து
வந்து விடு என்னோடு
வியாபாரமான கல்வியை
இன்றியமையா உரிமையாய் மாற்றிடவே!!!!!

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (29-Aug-16, 4:44 pm)
Tanglish : kalvi
பார்வை : 2918

மேலே