​வறுமை விலகாதோ

வசதியிலா வாழ்வெனில் வந்திடும் வறுமை
வரம்பறியா வாழ்வின் வறட்சிநிலை வறுமை
​வகையின்றி வாழ்ந்திட்டால் வாட்டிடும் வறுமை
வம்சங்கள் வளர்ந்​தாலும் வஞ்சிக்கும் வறுமை!

வகுத்தறியா வாழ்வில் வளமும் வாராது
வழியிலா வாழ்வில் வறுமையும் விலகாது
​வரவுள்ள வாழ்வே வறுமைக்கு வடிகால்
வட்டாணி வசமானால் வறுமையே வாராது!

வசியத்தால் வசமாகாது வழியும்​ ​வந்திடாது
வகுப்பு வாதங்கள் வகுமைக்கு வழியாகாது ​!​
​வழிமாறி வாழ்ந்தால் வறுமைக்கு வழியாகும்
வசந்தமும் வாராது வறுமையே வாழ்வாகும் ​!

வறியனின் வாட்டமே வறுமைக்கு வண்சிறை
​வறுமையின் வடிம்பே வதங்கிய வதனம் !
வருக்குக்கே வழியிலா வறியோர் வாழ்வும்
வளைவுள்ள வறியோரே வறுமையின் வரைப்படம் !

வருத்துது வாட்டுது வறுமையின் வடிவங்களும்
வருவாய்க்கு வழியின்றி வாடும் வறியவர்களும்
வறுமையும் விலகாதோ வழியொன்றும் வாராதோ
வருந்தி வாடுகின்றேன் வருங்காலம் வளம்பெறவே !

(வட்டாணி=திறமை )
(வகு​மை=மகிழ்​ச்சி)
( வண்சிறை = மதில் )
( வடிம்பு = விளிம்பு, ​வதனம் = முகம் )
( வருக்கு = கஞ்சி )


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Aug-16, 9:46 pm)
பார்வை : 645

மேலே