சீர்மிகு சண்முகம் செட்டியாரும், நானும் - இரு விகற்ப நேரிசை வெண்பா

காரைக்குடி ஆறாவயலைச் சேர்ந்த, தற்சமயம் சென்னையில் வசிக்கும் திரு. சண்முகம் செட்டியார் அவர்கள் ஒரு சிறந்த ஆங்கிலக் கவிஞர். poem hunter தளத்தில் 9000 ஆங்கிலக் கவிதைகள் எழுதியிருக்கிறார். தொலைபேசி வாயிலாக நட்புக் கொண்ட அவரும், நானும் சென்ற வாரம் சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சந்தித்தோம்.

பார்த்தேன்; மனமகிழ்ந்தேன்; பாந்தமுடன் நட்புகொண்ட
சீர்மிகு சண்முகம் செட்டியாரை - தேர்ந்தேன்நான்
நட்புக்கோர் நல்லதொரு நண்பராய் நற்கவியாய்;
பெட்பு மிகக்கொண்டேன் நான்!

பெட்பு - பெருமை

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியும், எதிர்க் கட்சியும் ஒன்றையொன்று குற்றம் சாட்டுவதிலேயே குறியாகச் செயல்படுகின்றன. ஆளுங்கட்சி உறுப்பினர் எதிர்க் கடசி உறுப்பினர்களை 'வயற்காட்டுப் பொம்மைகள்' என கேலி செய்கின்றனர்.

அதை வாசித்ததும் என் மனதில் எழுந்த,

இருவிகற்ப நேரிசை வெண்பா:

எண்ணிக்கை கள்குறைந்தால் எல்லோரும் எப்பொழுதும்
வண்ண வயற்காட்டுப் பொம்மைகள்தாம் - எண்ணித்
துணிவீரே ஏளனம் செய்யுமுன்னர்; செய்யின்
பிணிதானென் றேநீர் உணர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Aug-16, 9:49 pm)
பார்வை : 104

மேலே