நீயே என் மனைவி

பெற்றெடுத்தவளும் பெண்ணாக, நாளை கணவனாக என்னை தத்தெடுப்பவளும் பெண்ணாவாள் ! இருயுகம் கொண்ட வாழ்விற்கு புதுயுகம் என்பதை உணர்த்திய பெண்ணே ! நீயே இஸ்லாத்தின் கண்கள்.

தாயே ! உன் கருவறையில் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் நீ என்னை சுமந்து சென்ற காலத்தில் நான் அறியவில்லை ! ஆனால் என்னை பெற்றெடுக்கும் வேளையில் உன் உயிர் குற்றுயிராக போனதே !

பத்துத் திங்கள் பத்திரமாக என்னை வயிற்றில் சுமந்து உன் உடம்பிற்கு சுமையாக உன் கருவறையில் தனியாக நானிருந்த நேரம் உன் வேதனையை உணராத பிள்ளையாக பிறந்து விட்டேனே !

மனைவியானவளே ! மார்க்கத்திற்காக என்னுடன் இணைந்தவளே ! மாதங்கள் பல சென்றாலும் மாறாத என் அன்பு உன்னை மாற்றிய அம்பாகிப் போனதை அறியாதவளாக இருந்தாயே !

கட்டிலில் காத்திருந்த மனைவியை, என் ஆசையின் அஸ்திவாரம் என்னால் உன் வயிற்றில் உண்டான கருவாக நாளை தொட்டிலில் தொல்லைகளை செய்யும் என் பிள்ளைகளாக பிறக்குமே !

கணவனுக்காக காத்திருந்து, காதலுடன் காலங்களை கடத்திக்கொண்டு, கண்களில் கண்ணீர் உற்றெடுக்கும் வரையிலும் ஆனந்த கண்ணீருடன் காரணங்கள் இன்றி காத்திருக்கும் என் மனைவியின் அன்பே என் கண் முன்பே நிழலாக உருவெடுத்தது !

எழுதியவர் : அப்துல் ஹமீட் (30-Aug-16, 5:54 am)
Tanglish : neeye en manaivi
பார்வை : 212

மேலே